காமன்வெல்த் போட்டியையொட்டி பாலம் கட்டும் பணிக்காக டெல்லியில் வசித்த தமிழர்களின் குடிசை வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
பிழைப்புத்தேடி தலைநகர் வந்த தமிழர்கள் தெற்கு டெல்லி நிஜாமுதின் இரயில் நிலையம் அருகில் சுமார் 700 குடிசைகளை அமைத்து அங்கு பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள்.
கூலி வேலை பார்த்து வரும் தமிழர்கள் தங்கியிருந்த குடிசை வீடுகளை டெல்லி மாநகராட்சி நேற்று பலத்த பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரங்கள் மூலம் இடித்து தள்ளினர்.
காமன்வெல்த் போட்டியையொட்டி தமிழர்கள் வசித்த பகுதியில் பாலம் கட்டுவதற்காக குடிசை வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டிருப்பதாக டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை என்பது தமிழர்களின் புகார் ஆகும். எவ்வித முன் அறிவிப்பு இல்லாமலும், பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மாற்று இடம் வழங்காமலும் டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதனால் தலைநகரில் வீடு, வாசல்களை இழந்து குழந்தை, குட்டிகளுடன் தமிழர்கள் வீதிகளில் அல்லாடிய காட்சி பரிதாபமாக இருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக