திங்கள், 31 மே, 2010

தாகூர் சிலையைஜனாதிபதி திறந்து வைத்தார்

ஷாங்காய்:சீனாவின் ஷாங்காய் நகரில், தேசிய கவி ரவீந்திரநாத் தாகூரின் சிலையை ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்று திறந்து வைத்தார்.தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர், சீனாவுக்கு பலமுறை சென்றவர்; 1920ம் ஆண்டில் மூன்று முறை சீனாவுக்கு சென்றுள்ளார். கடந்த 1923ம் ஆண்டு அவர், பீஜிங் நகரின் பல இடங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார். ஷேக்ஸ்பியருக்கு அடுத்தபடியாக வெளிநாட்டு இலக்கியவாதியான தாகூரின் படைப்புகள், சீனாவில் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தாகூரின் படைப்பில் ஈர்க்கப்பட்ட சீனர்கள் பலர், வங்க மொழியை கற்று தேர்ந்துள்ளனர். தற்போது, தாகூரின் 150வது ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, சீனா பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், ஷாங்காய் நகரின் பிரதான மாவோ மிங் சாலை சந்திப்பில் நிறுவப்பட்டுள்ள தாகூர் சிலையை திறந்து வைத்தார். மொத்தம் 125 கிலோ எடை கொண்ட இந்த சிலையை, கவுதம் பால் என்ற சிற்பி வடிவமைத்துள்ளார்.சிலையை திறந்து வைத்து பிரதிபா பாட்டீல் குறிப்பிடுகையில், "ரவீந்திரநாத் தாகூர், துவாரகநாத் கோட்னீஸ், பேராசிரியர் டான் யுவான் ஷான் ஆகியோர் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். இவர்களின் நட்பு, இந்திய - சீன உறவுக்கு இலக்கணமாக இருந்தது' என்றார்.

கருத்துகள் இல்லை: