Kulitalai Mano : மசோதாக்கள் விவகாரத்தில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் கால வரம்பு நிர்ணயித்த தீர்ப்பில், உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 14 கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தொடர்பாக, ஆளுநருக்கெதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில், 2 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 142-ல் தனக்கு வழங்கப்பட்டிருக்கும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தது.
அதோடு, மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க கால வரம்பும் நிர்ணயித்தது. இந்தத் தீர்ப்பின் மூலம், மசோதாக்கள் மீதான நடவடிக்கைக்கு நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பு தானாக குடியரசுத் தலைவருக்கும் பொருந்தியது.
Article 142
இதனால், குடியரசுத் தலைவருக்கு எப்படி உச்ச நீதிமன்றம் கால வரம்பு நிர்ணயிக்க முடியும் என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோர் காட்டமாகக் கேள்வியெழுப்பினார்.
உச்ச நீதிமன்றத்துக்கு திரௌபதி முர்மு 14 கேள்விகள்!
1. பிரிவு 200-ன் கீழ் ஒரு மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு விருப்பங்கள் என்னென்ன?
2. ஒரு மசோதா ஆளுநர் முன் சமர்ப்பிக்கப்படும்போது, அவருக்கு இருக்கும் அனைத்து அரசியலமைப்பு விருப்பங்களையும் செயல்படுத்தும்போது, அமைச்சரவையால் வழங்கப்படும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்படுகிறாரா?
3. பிரிவு 200-ன் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமை நியாயப்படுத்தத்தக்கதா?
4. பிரிவு 200-ன் கீழ் ஒரு ஆளுநரின் நடவடிக்கைகள் தொடர்பாக நீதித்துறை மறுஆய்வுக்கு, பிரிவு 361 ஒரு முழுமையான தடையா?
5. அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற
6. பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயப்படுத்தத்தக்கதா?
7. அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரங்களைப் பயன்படுத்தும் முறை இல்லாத நிலையில், பிரிவு 201-ன் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா? செயல்படுத்தும் முறை பரிந்துரைக்கப்படுமா?
8. ஆளுநர் ஒரு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக ஒதுக்கும்போது, பிரிவு 143-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெறவும், உச்ச நீதிமன்றத்தின் கருத்தைப் பெறவும் குடியரசுத் தலைவர் கடமைப்பட்டுள்ளாரா?
9]ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு, நீதிமன்றங்கள் எந்த வகையிலும் அதன் உள்ளடக்கங்கள் மீது தீர்ப்பை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறதா?
10. மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் சட்டமாக நடைமுறைப்படுத்த முடியுமா?
11. பிரிவு 145(3) இன் படி, எந்தவொரு உச்ச நீதிமன்ற அமர்வும், அரசியலமைப்பின் விளக்கம் குறித்த கணிசமான சட்ட கேள்விகளை உள்ளடக்கியதா என்பதை முதலில் முடிவு செய்து, குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அதை அனுப்புவது கட்டாயமில்லையா?
பிரிவு 131-ன் கீழ் வழக்குத் தொடருவதைத் தவிர, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலான மோதல்களைத் தீர்ப்பதற்கு உச்ச நீதிமன்றத்தின் வேறு எந்த அதிகார வரம்பையும் அரசியலமைப்புச் சட்டம் தடைசெய்கிறதா?
13. அரசியலமைப்பு அதிகாரங்கள் மற்றும் குடியரசுத் தலைவரின்/ஆளுநரின் உத்தரவுகளையும் பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியுமா?
14. முரணான உத்தரவுகளை பிறப்பித்தல்/ஆணைகளை பிறப்பித்தல் வரை பிரிவு 142 நீட்டிக்கப்படுகிறதா?
சனாதிபதி அம்மா
இந்த கேள்விகளை உங்களுக்கு எழுதி தந்து கேட்க சொன்ன பார்ப்பன பாம்புகளிடம் சொல்லுங்கள்
சட்டத்தின் முன் அனைவரும சமம் என்று
உங்களை ஒரு வெறும் அலங்கார பொம்மையாக பயன்படுத்தும் ஒன்றிய அரசினரிடம் சொல்லுங்கள்
நீங்களும் இந்த ஒன்றியத்தின் முதல் குடிமகளே
நீங்கள்தான் முதலில் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டியவரே
நீதிமன்ற உத்தரவால் திகைப்படைந்த பார்ப்பனீயம்
உங்க பதவியை பயன்படுத்தி
உங்களை பயன்படுத்தி 14கேள்விகளை தயாரித்து உங்க கையில் தந்து கேட்க சொல்லி உள்ளது
ஆண்டவனையே கேள்வி கேட்கலாம்
அவன் இருந்தால்
நீங்களாே மானுடர்
சட்டத்திற்கு உட்பட்டவரே
இத்தனை கேள்விகள் எழுதி தந்தவனிடம் சொல்லுங்கள்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் மசோதாவை ஒரு நியமன ஆளுநன் தடை செய்து கொண்டிருந்தானே அது சரியா என்று
நீங்கள் ஒரு TOOL:
பேசாம இருங்க
1 கருத்து:
ஜனாதிபதி, கவர்னர்களை ஒரு குறிப்பிட்ட காலநிர்ணயம் கொடுத்து, நடவடிக்கை எடுக்க அறிவுரு த்திநாள் இந்த பிரச்னை தேவை யில்லையே.
கருத்துரையிடுக