சென்னை, ஆக.6:டெல்லியில் இருந்து விமானத்தில் வந்து
சென்னையில் 23 இடங்களில் பெண்களிடம் செயின் பறித்து விட்டு டெல்லியில்
அடுக்குமாடி இல்லத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கைதான இருவர்
போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
காவல்துறை இணை ஆணையர் மனோகரன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 50 சவரன் நகைகள் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மர்ம நபர்கள் பறித்து சென்றனர். அவர்கள் வடமாநில வாலிபர்கள் போன்ற தோற்றத்தில் இருந்தனர். தொடர்ந்து இளைஞர்கள் சிலர் ஒரே மோட்டார் சைக்கிளில் பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டது போலீசுக்கு தெரிய வந்தது. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்தனர்.
இது தொடர்பாக பெரியமேட்டில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் டெல்லியைச் சேர்ந்த 2 பேர் சிக்கினர். இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னை வந்த இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இவர்களிடமிருநது விமான டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களின் கூட்டாளிகள் பங்காஜ், சாகர் உள்ளிட்ட 3 பேர் தாங்கள் பறித்த செயினுடன் விமானத்தில் டெல்லிக்கு தப்பிச் சென்றுவிட்டனர். இவர்களோடு மேலும் 6 பேரும் சென்னை வந்து ஷிப்டு முறையில் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. டிப்டாப் உடையணிந்த இளைஞர்கள் தங்களை போலீஸ் என்று கூறிக்கொண்டு,
சென்னையில் பல்வேறு இடங்களில் வயதான பெண்ககளிடம் நகையை பறித்துச் சென்றனர்.இதனையடுத்து சென்னையில் செயின் பறிப்பு திருடர்களை வேட்டையாட காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி 2 இணை ஆணையர்கள் மேற்பார்வையில் 12 துணை ஆணையர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் நடவடிக்கையில் இறங்கினர். வாகன சோதனையும் தீவிரப்படுத்தப்பட்டது. இதனையடுத்து டெல்லியை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து காவல் இணை ஆணையர் மனோகரன் செய்தியாளர்களிடம் கூறியாதவது’;கடந்த 1-ம் தேதி இரவு பெரியமேடு பகுதியில் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்களை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்தனர். இதில், அவர்கள் வடமேற்கு டெல்லியின் கிராவி சுலைமான் நகரை சேர்ந்த சந்தீப் (30), புதுடெல்லி ஹர்சி விகாப் பகுதியை சேர்ந்த சஞ்சய் என்ற விஜய் (40) என்பது தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களது கூட்டாளிகள் 3 பேர் டெல்லிக்கு தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் களைக் கைது செய்ய தனிப்படையினர் டெல்லி விரைந்துள்ளனர். இந்த டெல்லி கும்பல் தமிழகத்தில் நகை பறிப்பில் ஈடுபட்டு, விமானம், ரயில் மூலமாக இதுவரை 300 பவுனுக்கும் மேல் டெல்லிக்கு அனுப்பிவைத்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரை 3 தடவை இது போன்று வந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். ஒரு தடவை சென்னைக்கு வந்தால் 100சவரன் நகைகளை கொள்ளையடித்து செல்வது இவர்களது திட்டமாக இருந்துள்ளது. இவர்களது கூட்டாளிகள் மேலும் சிலர் இன்னமும் தமிழகத்தில் இருப்ப தும் தெரியவந்தது. அவர்களை கைது செய்யும் பணியில் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
கடந்த 19ந்தேதி டெல்லியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்துள்ளனர். சவுகார்பேட்டையில் உள்ள விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். மயிலாப்பூர் பகுதியில் பழைய பைக் ஒன்றை வாங்கி, அதில் சென்றுதான் செயின்களைப் பறித்துள்ளனர்.
ஓரளவு நகைகள் தேறியதும், விமானம் அல்லது ரயிலில் டெல்லிக்குச் சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்து நகை பறிப்பில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.பிடிபட்டவர்களிடம் இருந்து ரயில், விமான டிக்கெட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுவரை எத்தனை பேரிடம், எவ்வளவு நகைகள் பறித்துள்ளனர் என்று விசாரணை நடக்கிறது.
அவர்களிடம் இருந்து 25 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இவர்கள் மீது கொச்சி,கோஷினூர், டெல்லி உள்ளிட்ட இடங்களில் பல வழக்குள் நிலுவையில் உள்ளன. திருவல்லக்கேணி, மயிலாப்பூர். அண்ணாநகர். பெரியமேடு உள்ளிட்ட செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகம் நடைபெற்ற இடங்களில் 3000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
24 மணி நேரமும் ரோந்துப் வாகனங்கள் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பிடிப்பட்டுள்ள கொள்ளையர்களுக்கு இந்தி மட்டுமே தெரிகிறது. எனவே, இந்தி தெரிந்த அதிகாரிகளை வைத்து தகவல்களை சேகரித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினர்
maalaisudar.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக