ஞாயிறு, 9 ஜூலை, 2017

திருவள்ளுவர் - ஆதி .. பகவன் வரலாறு 200 வருடங்களுக்கு முன்பு புனையப்பட்ட கட்டுகதை

இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தணியில் இருந்த இரண்டு வீர சைவ புலவர்களே (பார்ப்பனர்கள்) இக்கதையை முதன்முதலில் புனைந்தவர்கள் ஆவார்கள். திருக்குறளை முதன்முதல் அச்சில் பதித்தவர் யாழ்ப்பாணம்  ஆறுமுக நாவலர். நாவலர் பதிப்பில் இக்கதை கிடையாது என்பது ஈண்டு குறிப்பிட்டத்தக்கது."
Valasavallavan பெரியார் 1949 சனவரி மாதம் 15,16 ஆகிய இரண்டு நாட்கள்
சென்னையில் மிகப்பெரிய அளவில் திருக்குறள் மாநாட்டை நடத்தினார். அம்மாநாட்டில் வரவேற்பு குழுத்தலைவர் திரு.வி.க. அவர்கள் தம் வரவேற்பு உரையில்
தமிழகத்தின் இயற்கைத் தலைவர் பெரியார் இராமசாமியே!
பெரியாரின் உலக இயக்கத்திற்கு ஏற்ற நூல் திருக்குறளே!
என்று புகழாரம் சூட்டினார்.
திருவள்ளுவரை இழிவுபடுத்தி திருத்தணியைச் சேர்ந்த சரவணன்,பெருமாள் என்ற இரண்டு பார்ப்பனர்கள் எழுதி உள்ள பொய்யான கதையை இம்மாநாட்டில் வன்மையாக கண்டித்தனர்.
திரு.வி.க. உரையாற்றுகையில்
" ஆதிபகவன் கதைபற்றி பாரதியார்(நாவலர் சோமசுந்தர பாரதியார்) அவர்கள் ஒன்று கூறினார்கள் ஆதி என்ற புலைச்சிக்கும் பகவன் என்ற பார்ப்பானுக்கும் பிறந்தவரே வள்ளுவர் என்ற கதை பொய் கதை என்று குறிப்பிட்டார்கள்.
அக் கதை பொய்க் கதை மட்டுமன்று,இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னேதான் புனையப்பட்ட கதை.

இந்த உண்மையை எனக்கு புலப்படுத்தியவர்கள் காலம் சென்ற பாம்பன் சுவாமிகள்.
இரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தணியில் இருந்த இரண்டு வீர சைவ புலவர்களே (பார்ப்பனர்கள்) இக்கதையை முதன்முதலில் புனைந்தவர்கள் ஆவார்கள்.
திருக்குறளை முதன்முதல் அச்சில் பதித்தவர் ஆறுமுக நாவலர்.
நாவலர் பதிப்பில் இக்கதை கிடையாது என்பது ஈண்டு குறிப்பிட்டத்தக்கது."
திரு.வி.க. மேலும் கூறியதாவது,
" ஒர் உண்மையை, நாம் நன்றாக அறுதியிட்டு கூறலாம்.
நம் நாட்டிலே பழம் புலவர் எவருக்கும் வரலாறு என்பதே கிடையாது; கிடையாது; கிடையாது.
பழம் தமிழ்ப் புலவர் எவரும் தம் வரலாற்றை தாமே எழுதும் வழக்கத்தை கொண்டிருந்தாரில்லை.
புலவர்களின் வரலாற்றை பிறர் எழுதும் வழக்கமும் அந்நாளில் இல்லை.
எனவே தான் பழந்தமிழ்ப் புலவர் எவருடைய வரலாற்றையும் நாம் அறிதல் இயலவில்லை."
(போர் வாள் 22-1-49)
திருவள்ளுவருக்கு ஏற்பட்ட இழிவை நீங்கிய மாநாடு பெரியார் நடத்திய திருக்குறள் மாநாடே ஆகும்.
Valasavallavan

கருத்துகள் இல்லை: