திங்கள், 10 ஜூலை, 2017

புதுச்சேரியில் பாஜக ஆட்சி ? முழு மூச்சில் கிரண் பேடி ...

மின்னம்பலம் :புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியின் கடிவாளம் தற்போது மத்தியில் ஆளக்கூடிய பாஜக ஆட்சியின் கையில் உள்ளது. காங்கிரஸ் அரசு புதுச்சேரி மக்களுக்கு எந்தவிதமான நலத்திடங்களையும் செய்ய முடியாமல் தவித்துவருகிறது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் ஒவ்வொரு செயலிலும், காங்கிரஸ் ஆட்சிக்கு செக் வைத்து, பாஜக-வின் ஆட்சியைப் புதுவையில் அமைக்கும் முயற்சி தெளிவாக தெரிகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 30 எம்.எல்.ஏ-க்களில், காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 15 பேர், திமுக 2, என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 8, அதிமுக எம்.எல்.ஏ-க்கள் 4, சுயேட்சை எம்.எல்.ஏ. 1 என்ற விகிதத்தில் உள்ளனர். இதில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மொத்தம் 12 பேர். தற்போதைய நிலையில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து, பாஜக ஆட்சியை அமைக்க 4 எம்.எல்.ஏ-க்கள் தேவைப்படுகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மாற்றி வாக்களித்தால் கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் எம்.எல்.ஏ. பதவி பறிபோகும் என்பதால், புதுச்சேரியில் பாஜக ஆட்சி அமைக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களில், ஆறு எம்.எல்.ஏ-க்களுக்குக் குறிவைத்து, பாஜக சார்பில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் பேசி வருகிறார்கள் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் அமைப்பாளர் ஶ்ரீதர் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை: