வெள்ளி, 14 ஜூலை, 2017

அமெரிக்கா : வெளிநாட்டு மாணவர்களுக்கு நிபந்தனை!

அமெரிக்கா : வெளிநாட்டு மாணவர்களுக்கு நிபந்தனை!
அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் தாங்கள் அமெரிக்க கல்வித் திட்டத்தின் கீழ் படிப்பதற்கு பதிவு செய்தது முதல் அந்தப் படிப்பை முடிக்கும் காலம் வரை ஒரு முறை விண்ணப்பித்தால் போதுமானது. அவர்கள் தங்கி படிக்கும் காலம் வரை எஃப்-1 விசா வழங்கப்படும்.
இந்நிலையில், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் தங்கி படிப்பதற்கு, நாட்டின் புதிய குடியேற்றக் கொள்கையின் அடிப்படையில் உள்நாட்டு பாதுகாப்பு, ஒருமைப்பாடு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் ஆண்டுதோறும் தங்களுடைய படிப்புக்கான பதிவை மறு விண்ணப்பம் செய்து புதுப்பிக்க வேண்டும். இந்த நடைமுறைக்கு ஒவ்வொரு முறையும் 200 அமெரிக்க டாலர்களைக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை கடந்த 2 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்து உள்ளது. 2016 ஆம் ஆண்டில் 1,6,000 இந்திய மாணவர்கள் அமெரிக்க கல்லூரிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, சர்வதேச கல்வி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை 2 ஆண்டுக்கு முன்பு சுமார் 1 லட்சமாக இருந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நியூயார்க் சார்ந்த சர்வதேச கல்வி நிறுவனம்,' அமெரிக்காவில் தங்கி படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $ 35 பில்லியனை கூடுதலாகச் சேர்க்கின்றனர்' எனத் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 2016 ஆம் ஆண்டு 1.4 மில்லியன் வெளிநாட்டு மாணவர்களில் 2.8% பேர் தங்கள் விசா காலம் முடிந்த பின்பும் அங்கேயே தங்கியிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
ஆறு அமெரிக்க உயர் கல்வி நிறுவனங்கள், 250 க்கும் மேற்பட்ட அமெரிக்கக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நடத்திய கணக்கெடுப்பின் ஆரம்ப முடிவுகளின் படி, இவ்வாறான புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டால், இந்திய மாணவர்களுக்கு அமெரிக்காவில் படிக்கும் ஆர்வம் குறைந்துவிடும். இதனால், இளங்கலைப் படிப்புகளில் 26 % மற்றும் பட்டப் படிப்புகளில் 15% சரிவு ஏற்படும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், வெளிநாட்டு மாணவர்களின் வரவு வெகுவாக குறையும் என்றும், மாணவர்கள் வேறு நாடுகளைத் தேர்வு செய்யும் நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: