minnambalam: மத்திய அரசின் சந்தைகளில் இறைச்சிக்கான
கால்நடைகள் விற்கத் தடை என்ற புதிய சட்டத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம்
விதித்த இடைக்கால தடையை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட
வழக்கில் இடைக்காலத் தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த
வாரம் செவ்வாய்க்கிழமை (11.07.2017) நடந்த இந்த வழக்கில் இடைக்காலத்
தடைக்கு அனுமதியளித்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த மே மாதம் 26ஆம் தேதி மத்திய அரசின் சுற்றுச் சூழல் பாதுகாப்புத் துறை சார்பாக நாடு முழுவதும் சந்தைகளில் இறைச்சிக்கான கால்நடைகள் விற்கத் தடை என்ற அறிவிப்பு வெளியானது. இந்தத் தடை உத்தரவுக்கு நாடு முழுவதும் இருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்தது. விவசாயிகள் தரப்பிலும் இந்த உத்தரவுக்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு ஒன்றில் மத்திய அரசின் தடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த இடைக்காலத் தடை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தற்போது இடைக்கால தடை உத்தரவு செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பை நாடு முழுவதும் உள்ள கால்நடை விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பொருளாதாரவியலாளர் விகாஷ் ராவல் கூறும்போது, "உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமையும். மேலும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மதித்து முறையாகப் பின்பற்ற வேண்டும். ஆனால் மத்திய அரசு இந்த இடைக்காலத் தடை சட்டத்தை நீக்குவதற்குத் தான் முயலும். அதுதான் இதில் எழுந்துள்ள கவலை" என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக