செவ்வாய், 11 ஜூலை, 2017

எச்ச ராஜாவுக்கும் நிர்மலாவுக்கும் கிடைக்கும் மரியாதை பொன்.ராதாவுக்கு ஏன் கிடைப்பதில்லை?

திமுகவை அரசியல் ரீதியாக பாஜக ஆட்டுவிக்கும்.. விமானநிலைய செய்தி தொடர்பாளர்.. முதலில் நிற்க முடியுமா என பாருங்கள் காரணம் எளிது ஆளும் அதிகாரமிருப்பதால் எதை பேசினாலும் கேட்டுக்கொள்வார்களென எண்ணி பாஜகவினர் அடிக்கும் கூத்து அவர்களுக்கெதிராகவே திரும்பும்.. அதிமுகவின் வீழ்ச்சியில் சுவரேறி குதிக்க நினைக்கும் போது விழும் இடம் பாதாளமென அறியாமல் போவதுதான் வேடிக்கை .. தமிழகத்தில் திராவிட சிந்தனை மக்களின் இரத்ததிலேயே ஊறிப்போனது இங்கே ஜாதி பேசுவான் கோவிலுக்கு போவான் ஆனால் வெறிக்கொண்டு அலைய மாட்டான் இது எல்லா ஜாதி மதத்தினருக்கும் பொருந்தும் சிறுபான்மையினர்கள் கூட குறிப்பாக முஸ்லிம்களம பெருவாரியானோர் திமுகவைதான் பின் துணைப்பார்கள் .. திமுக பாஜகவோடு கைகோர்த்த போது கூட இயக்கங்களை சேர்ந்தவர்களை தவிர பிறர் திமுகவோடு அனுசரணையாக தான் நடந்துக்கொண்டார்கள் கோவத்தை கூட உரிமையோடு கேள்வி எழுப்பினர்..

..
ஏன் இங்கே மதவாதம் தோற்கிறதென்றால் காலகாலமாய் மாமன் மச்சானென்றெ அழைத்து பழக்கப்பட்டவர்கள் திருமண பத்திரிக்கைகளில் கூட மதம் கடந்து பெயரிடும் வழக்க கொண்டவர்கள் ..அதுமட்டுமல்ல பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் இந்த சமூகத்தை தங்களின் அரசியல் பார்வை கொண்டு காத்துநின்றார்கள் இப்போதும் அதே பார்வையில் தளபதியின் தலைமையில் தமிழகமக்கள் சேர்த்திணைந்து செயலாற்ற காத்திருக்கிறார்கள்..
சில சில உதிரிகள் ஜாதிகளை சொல்லி மதவெறியை தூண்டி கூறு போட நினைக்கும் எண்ணத்தை தமிழகம் எதிர்கொள்ளும் ..
..
பொன்னரின் சமீபகால நடவடிக்கைகள் விரக்தியின் வெளிப்பாடாகதான் தெரிகிறது.. நாகர்கோவில் குறிப்பிட்ட சதமானம்/ விழுக்காடு ஆதரவிருந்தும் முக்கியத்துவமில்லாத பதவியை தந்து .. மக்கள் ஆதரவே இல்லாத நிர்மலாவிற்கு பிறப்பின் அடிப்படையில் அதிகாரத்தை தந்ததின் விளைவாக கூட இருக்கலாம்..கத்தி கத்தி பேசினாலும் யாருமே கண்டுகொள்ளவில்லை என்பதால் விரக்தியில் உளறலாம்.. எச் ராசாவிற்கு தருகிற மரியாதையை கூட ஊடகங்கள் தமக்கு தருவதில்லை என்ற நிலை இவரை ஏதையாவது பேசி உள்ளேன் அய்யா சொல்லவைக்கிறது.. அவ்வளவுதான்..
..
மற்றபடி இந்த திராவிடன் மீதெல்லாம் வருத்தமில்லை விவரகேட்டை கோவம் கொள்ளவா முடியும்..
..
பொன்னரே..
#நிறையதண்ணீர்_குடிக்கவேண்டிவரும்..
..
தோழர். ஆலஞ்சி
(ஆலஞ்சியார்)


கருத்துகள் இல்லை: