India Inc, be afraid! Baba Ramdev could be the next Tata or Ambani
மின்னம்பலம்: யோகா குரு பாபா ராம்தேவ் தனியார் பாதுகாப்பு அமைப்பைத் தொடங்கியுள்ள நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் அவரைப் பார்த்து அச்சமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யோகா குரு பாபா ராம்தேவ் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். பரக்ராம் சுரக்ஷா என்ற பெயரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அவரது பதஞ்சலி நிறுவனம் இந்திய ஆயுர்வேத மருத்துவ சந்தையில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாதுகாப்பு துறையில் அவர் கால் பதித்துள்ளது பல பன்னாட்டு நிறுவனங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடங்கிய 10 ஆண்டுகளில் அவரின் பதஞ்சலி நிறுவனம் நுகர்வோர் துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று இந்திய அளவில் அவரது பதஞ்சலி நிறுவன பொருட்கள் அதிகளவில் விற்பனையாகி வருகிறது. சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான இப்சோஸ் மேற்கொண்ட ஆய்வில் இந்தியாவில் செல்வாக்கு மிகுந்த பிராண்டுகளில் அவரது பதஞ்சலி நிறுவனம் 4வது இடத்தில் உள்ளது. கூகுள், மைக்ரோசாப்ட், ஃபேஸ்புக் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. எஸ்.பி.ஐ. ஏர்டெல், ரிலையன்ஸ், பிலிப்கார்ட் போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. இந்நிலையில்தான் பாதுகாப்பு துறையை அவர் தேர்வு செய்துள்ளார்.
தற்போதைய மத்திய அரசு ஆட்சியமைத்த பின்பு அவரது வளர்ச்சி அசுர வேகத்தில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் பதஞ்சலி நிறுவனத்தின் பாபா ராம்தேவ் 25-வது இடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.25,600 கோடியாக உள்ளது. ஒருவேளைப் பாதுகாப்பு துறையில் வெற்றி கிடைத்தால் அவரது அடுத்த குறியாக டெலிகாம் இருக்கலாம். அவரது யோகா வீடியோக்கள் அடங்கிய மொபைல்போன்கள் கூட விற்பனைக்கு வரலாம் . இந்தியாவில் தற்போது உள்நாட்டு தயாரிப்பு, பாரம்பரியம், இறை நம்பிக்கை போன்றவற்றுக்கு பெரிய வரவேற்பு உள்ளது. இது மூன்றுமே ராம்தேவ்க்கு சாதகமாக உள்ளது. இப்படியே சென்றால் அடுத்த டாடா, அம்பானியாக கூட அவர் மாறக்கூடும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக