செவ்வாய், 11 ஜூலை, 2017

லாலுவின் மகள் மிசா பாரதிக்கு அமுலாக்கல் துறை அழைப்பாணை

மின்னம்பலம் : பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத்தின் மகளும்,
ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் எம்.பி-யுமான மிசா பார்தி மீது வருமான வரித்துறையினர் பண மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக மிசா பார்தி மற்றும் அவரது கணவருக்கு சொந்தமாக புதுடெல்லியில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கப் பிரிவினர் கடந்த சனிக்கிழமை 8ஆம் தேதி சோதனை நடத்தினர். இதைதொடர்ந்து, லாலு பிரசாத்தின் மகள் மிசா பார்தி, அவரது கணவர் சைலேஷ்குமார் பெயரில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியுள்ளது.

இந்நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பண மோசடி வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டியிருப்பதால், இன்று மிசா பார்தி ஆஜராக வேண்டும். அப்போது அவர் தனது பெயரில் வைத்திருக்கும் சொத்துகள் குறித்த ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும் எனக்கூறி என அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதேபோல், மிசா பார்தி கணவர் சைலேஷ்குமாருக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.

கருத்துகள் இல்லை: