செவ்வாய், 11 ஜூலை, 2017

நடிகை பாவனா மானபங்க வழக்கில் கூட்டு சதி முன்னணி கதாநாயகன் நடிகர் திலிப் கைது

நடிகை, Actress,பாவனா,  Bhavana,  கதாநாயகன், Hero, நடிகர்,  Actor,   திலிப், Dilip,  சினிமா,Cinema, கொச்சி, Kochi, Cochi,கைது,Arrested, நீதிபதி,Judge, ஆன்டோ ஜோசப்,Ando Joseph,  திருக்காக்கரை எம்.எல்.ஏ. பி.டி. தாமஸ் ,Tirakkakkarai MLA PD Thomas, பல்சர் சுனில், Pulsar Sunil,இயக்குனர் லால் ,Director Lal,நடிகை பாவனா மானபங்க வழக்கில் மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகன் நடிகர் திலீப்பை போலீசார் நேற்று மாலை கொச்சியில் கைது செய்தனர். இரவோடு இரவாக நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கேரளா மட்டுமல்ல அனைத்து திரையுலகையும் அதிர்ச்சி அடைய செய்த சம்பவம் கடந்த பிப்.,17- இரவு நடந்தது. இரவு 10:30 மணிக்கு டப்பிங் முடிந்து வீட்டுக்கு நடிகை பாவனா சென்று கொண்டிருந்த காரை அங்கமாலி அருகே அத்தாணி என்ற இடத்தில் வழிமறித்து
பல்சர் சுனில் உட்பட சிலர் காரில் ஏறினர். பின்னர் காருக்குள் நடிகையை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்தனர். பின்னர் காக்கநாடு பகுதியில் நடிகையை இறக்கி விட்டு சென்றனர். அவர் அந்த பகுதியில் உள்ள சினிமா இயக்குனர் லால் வீட்டில் அபயம் தேடினார். அவர் சினிமா தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப், திருக்காக்கரை எம்.எல்.ஏ. பி.டி. தாமஸ் ஆகியோருக்கு தகவல் கூறிய பி், போலீசில் புகார் செய்யப்பட்டது.


சுனிலுக்கு அலைபேசி கொடுத்து


சுமார் நான்கரை மாதங்கள் இந்த வழக்கு விசாரணை பல்வேறு சர்ச்சைகளை
ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில், ''இந்த சம்பவத்தில் கூட்டு சதி இல்லை,'' என முதல்வர் பினராயி விஜயன் கூறியதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இரண்டுமாதத்துக்கு முன், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதனால் திலீப் தப்பி விடுவார் என்று கருதப்பட்ட நிலையில் சி.பி.ஐ., விசாரணை கோரிக்கை வலுத்ததால் போலீஸ் மீண்டும் விசாரணையை துரிதப்படுத்தியது.திலீப்பின் முதல் மனைவி நடிகை மஞ்சுவாரியாரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இரண்டாவது மனைவி நடிகை காவ்யா மாதவன் வீடு மற்றும் கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. பல்சர் சுனில் இரண்டு முறை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட பல்சர் சுனிலுக்கு அலைபேசி கொடுத்து, அவரது அழைப்புகளை பின் தொடர்ந்து, திலீப்பின் பங்கை போலீசார் உறுதி செய்தனர்.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு விசாரணைக்கு என்று திலீப்பை அழைத்து சென்ற போலீசார் மாலை 6:30 மணிக்கு கைது செய்தியை கசிய விட்டனர். இவருடன் திலீப்பின்மேலாளர் அப்புண்ணி, நெருங்கிய நண்பர் நாதிர்ஷா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் நள்ளிரவு வரை இவர்களது கைது பற்றிய விபரங்களை போலீசார் வெளியிடவில்லை.

குடும்பத்தில் குழப்பம்

நடிகை காவ்யா மாதவனுடன் திலீப் பழகுவதை முதல் மனைவி மஞ்சுவாரியாரிடம் நடிகை பாவனா தெரிவித்தார். இதனால் மஞ்சுவாரியார் விவாகரத்து பெற்றார். அதன் பின்னர் காவ்யாமாதவனை திலீப் இரண்டாவது மனைவியாக திருமணம் செய்தார்.
அன்று முதல் திலீப்புக்கு கஷ்டகாலம் தொடங்கியது. அதுமட்டுமல்ல ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் பாவனா, திலீப்புடன் ஒத்துழைக்கவில்லை. குடும்பத்தில் குழப்பம் ஏற்படுத்தியதும், பண விவகாரமும் திலீப்பை கோபமடையச்செய்தது.பல்சர் சுனிலுக்கு 1.5 கோடி ரூபாய் பேரம் பேசி முதற்கட்டமாக 50 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது. கடந்த ஒரு ஆண்டாக இதற்கு திட்டமிடப்பட்டது. பொதுவாக
திரையுலகில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது போலீஸ் வரை செல்வதில்லை. ஆனால் முன்னணி நடிகையாக இருந்தும் பாவனா போலீசுக்கு சென்றதால் இன்று மலையாள கதாநாயகன், வில்லனாகி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.நமது சிறப்பு நிருபர் தினமலர்

கருத்துகள் இல்லை: