ஜார்க்கண்டின் முதல் பழங்குடி அல்லாத முதலமைச்சரான ரகுபர் தாஸுக்கு
இரண்டு பெண்கள் பாத பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குருபூர்ணிமா தினத்தையொட்டி நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட ஜார்க்கண்ட் முதல்வரின் பாதங்களை ரோஜா இதழ்கள் சேர்த்த நீரால் இரண்டு பெண்கள் கழுவி, மந்திரங்களை உச்சரித்து வரவேற்பு அளித்தனர்.
பெண்களை பாத பூஜை செய்ய வைத்த முதல்வரின் செயலுக்கு பெண்ணிய செயல்பாட்டாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த செயல்பாட்டாளர் பிருந்தா, “இது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற செயல்கள் ஒரு முதல்வர் செய்யக்கூடியது அல்ல” என தெரிவித்துள்ளார்.
காங்கிரஸைச் சேர்ந்த ரஞ்சித் ரஞ்சன், “பாதங்களை கழுவுவதற்கும் சேவை செய்வதற்கும் இவர்களுக்கு எப்போதும் பெண்கள்தான் தேவைப்படுகிறார்கள்” என விமர்சித்துள்ளார். thetimmestamil.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக