அணு உலையை அமைக்க அனுமதி மறுக்கும் எந்த
மாநிலத்துக்கும் பிற
மாநிலங்களில் இருந்து அணு மின்சாரம் கிடைக்காது என்று மத்திய மின்சாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய மின் திட்டங்களை மத்திய மின்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஜூலை 10-ஆம் தேதி(இன்று) ஆய்வு செய்தார். மேலும், தமிழக மின் திட்டங்கள் குறித்து தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “அணுஉலைகளை எதிர்க்கும் மாநிலங்களுக்கு எந்த மாநிலங்களில் இருந்தும் அணு மின்சாரம் வழங்க வாய்ப்பில்லை. மின் தேவையை பூர்த்தி செய்ய அணுமின்சார உற்பத்தி அவசியமான ஒன்றாகும். அணுஉலை அமைக்க இடம் அளிக்கும் மாநிலத்திற்கு மின்சாரம் வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும். கூடங்குளத்தின் 3 மற்றும் 4 வது அணுஉலையில் உற்பத்தி செய்யப்படும் 2000 மெகாவாட் மின்சாரத்தைத் தமிழகத்திற்கு தர நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். உதய் திட்டத்தால் தமிழகத்தில் மின்துறைக்கான இழப்பு குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி-யால் நிலக்கரி கொள்முதல் விலை குறைந்ததால் மின் உற்பத்தி செலவும் தற்போது குறைந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உதய் திட்டத்தில் சேர ஒப்புக்கொண்டார். அதனால், உதய் திட்டத்தில் தமிழகம் சேர்ந்ததால், தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒன்றாகப் பணியாற்றி மின்சார சிக்கன நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், விவசாயத்தில் சூரிய மின்சக்தி பயன்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்குப் பின் நிலக்கரி, பழுப்பு நிலக்கரி உள்ளிட்டவற்றின் மீதான வரிகள் குறைந்துள்ளன. இதனால் ஏன்.எல்.சி.க்கு 500 ரூ கோடி செலவு குறைந்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார். minnambalam

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக