புதன், 12 ஜூலை, 2017

திருக்குறள் மீது சுப்பிரமணிய பாரதி பூசிய சேறு

'பாரதி' ய ஜனதா பார்ட்டி புத்தகத்திலிருந்து,
"அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு"
என்று தொடங்கிய திருவள்ளுவர், தன்னுடைய 1330 குறள்களிளும் கடைசிவரை ஆதிபகவன் யார் என்று சொல்லாமலேயே விட்டுவிட்டார். இது, சுப்பரமணிய பாரதிக்கு பெரிய தொந்தரவாகவே இருந்திருக்கிறது.
அந்தக் கடுப்பு தாங்காமல், எடுத்திருக்கிறார் எழுதுகோலை - வடித்திருக்கிறார் பாடலை.
ஆதிபகவன் யாரென்றும், தன்னுடைய சிறப்புகள் எதனால் என்றும் தமிழ்த்தாயே ஒப்புதல் வாக்குமூலம் தருவதுபோல் எழுதி அடைத்தார் தமிழர்களின் வாயை.
"ஆதிசிவன் பெற்றுவிட்டன - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக் கணஞ் சேய்து கொடுத்தான்.
மூன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்ட நல் லன்பொடு நித்தம் வளர்த்தார்.
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வழ்ந்தேன்."
இதில் மொத்தம் மூன்று ஆப்புகளை தமிழர்களுக்கு அடித்திருக்கிறார் சுப்பரமணியார்.


1. வள்ளுவர் சொன்ன ஆதிபகவன் சிவன் என்று அறிவிக்கிறார்.
(பர்ப்பனரில் பாரதி அய்யர் பிரிவைச் சேர்ந்தவர். அய்யருக்கு சிவனே எல்லாம்.)
2. தமிழுக்கு இலக்கணம் செய்தவர் அகத்தியர் என்று சொல்லப்படுவதைப் பயன்படுத்தி, அகத்தியர் ஒரு பார்ப்பனர் என்று அவருக்குப் பூனூல் அணிவிக்கிறார்.

3. நன்றாக செய்யப்பட்டதாக தன் பெயரிலேயே சொல்லிக் கொள்கிற ('ஸம்' என்றால் நன்றாக 'கிருதம்' செய்யப்பட்டது) ஸம்ஸ்கிருதத்திலிருந்து, தமிழ் தயாரிக்கப்பட்டதாக, ஒட்டு மொத்தமாக சேர்த்து வைத்து ஆணியடிகிறார்.
'கல்தோன்றி, மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி'
என்று மாறுவேடப் போட்டியில் அரிதாரம் பூசி வசனம் பேசியவர்கள் முகத்தில் கரியைக் குழைத்துப் பூசி விட்டாலும், அவரும் ஒரு மாறுவேடம் போடுகிறார்...!
- *தோழர் வே.மதிமாறன்*
ஜூலியட்ஜெனிபர் பதிவிலிருந்து....

கருத்துகள் இல்லை: