ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்தி நிலையம்
ஊத்துக்குளி வெண்ணெய் உற்பத்தி நிலையம்
திருப்பதிக்கு லட்டு, பழநிக்கு பஞ்சாமிர்தம், திருநெல் வேலிக்கு அல்வா – இவைபோல ‘ஊத்துக்குளி’ என்றதுமே, ‘வெண்ணெய்’ என்று யாரும் யோசிக் காமல் சொல்லிவிடுவார்கள். ஒருகாலத்தில் வெண்ணெய் உற்பத்தியில் கொடிகட்டிப் பறந்த ஊத்துக்குளியில் இப்போது, வெண்ணெய் எங்கே என்று தேடவேண்டி இருக்கிறது!
திருப்பூர் மாவட்டத்தின் ஊத்துக்குளி – வெண் ணெய்க்கு பேர் போன ஊர். இங்கு தயாரான வெண் ணெய்யானது இந்தியாவின் பல பாகங்களுக்கும் பயணித்த காலமுண்டு. ஆனால், இப்போது உள்ளூரி லேயே வெண்ணெய்யைத் தேடி விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டி இருக்கிறது.
எருமைகளே காரணம்
‘‘இதே ஊத்துக்குளியில் ஒருகாலத்துல ஐம்பதுக்கும் அதிகமான வெண்ணெய் கம்பெனிகள் இருந்துச்சு. குடிசைத் தொழில் கணக்கா வெண்ணெய் உற்பத்தி செஞ்சு வியாபாரம் பார்த்தாங்க. வாரத்துக்கு பத்து டன் அளவுக்குக்கூட இங்கருந்து வெண்ணெய் வெளி யூர்களுக்குப் போகும்.
இப்படி வெண்ணெய் வளம் மிகுந்து இருந்ததுக்குக் காரணம் இங்கிருந்த எருமை மாடுகள் தான்.’’ என்கிறார் இங்கு வெண்ணெய் வியாபாரம் செய்யும் விஸ்வநாதன். அவரே தொடர்ந்து பேசுகையில், ‘‘அப்பெல்லாம், ஊத்துக்குளியைச் சுத்தி இருக்கிற அம்பது, அறுபது கிராமங்கள்ல பத்தாயிரத்துக்கும் அதிகமான எருமை மாடுகளை வளர்த்தினாங்க. அதுகளுக்கு தீனி போட்டு சமாளிக்கிற அளவுக்கு இந்தப் பகுதிகள்ல விவசாய மும் செழிப்பா இருந்துச்சு. அதனாலதான் வீட்டுக்கு நாலஞ்சு எருமைகள வச்சிருந்தாங்க. இப்ப மனுஷனுக்கே தண்ணியக் காணோம். அது மட்டுமில்லாம, அரசாங்கமே ஆவின், மில்மான்னு பால் பண்ணைகளை கொண்டு வந்துருச்சு. அவங்க, நாட்டு மாடு, ஜெர்சி மாடுன்னு பசும்பால் கறக்கிறதைத்தான் ஊக்கப்படுத்தறாங்க.
பசுமாடு, மறு கன்று ஈனும் வரை பால் கறக்கும். எருமைக்கு கன்று ஈன்று ஆறுமாதத்தில் பால் வற்றிவிடும். எருமைக்கு தண்ணீர் அதிகம் வேணும். இந்தச் சிக்கல்கள் இருக்கிறதால எருமை வளர்த்தறது ரொம்பவுமே குறைஞ்சிடுச்சு. இப்ப இந்தப் பகுதிகள்ல ஆயிரம் எருமைகள் இருந்தாலே அதிகம். இந்த எருமைகள் மூலமா வாரத்துக்கு ஒரு டன் அரை டன் வெண்ணெய் கிடைக்கிறதே அரிது. உற்பத்தி இந்தளவுக்குச் சுருங்கிட்டதால இப்ப ஏழெட்டுப் பேரு மட்டும் தான் இங்க வெண்ணெய் வியாபாரம் பார்த்துட்டு வர்றோம்’’ என்றார் மிரட்டுது ஜி.எஸ்.டி எம்.ஜி.ஆர். ஆட்சி தொடங்கி ஜெயலலிதா காலம் வரை வெண்ணெய்க்கு 5 முதல் 10 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது. வெண்ணெய் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று இந்த வரிவிதிப்பு கள் உடனடியாக வாபஸ் பெறப்பட் டன.
இந்த நிலையில், இப்போது ஜி.எஸ்.டி. ரூபத்தில் வெண்ணெய்க்கு மீண்டும் சிக்கல்! இதுகுறித்தும் பேசிய விஸ்வநாதன், ‘‘வெண்ணெய்க்கு இப்ப 14 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி போட்டுருக்காங்க ஒரு கிலோ வெண்ணெய்யோட கொள்முதல் விலை 360 ரூபாய். அதுல ஜி.எஸ்.டி. வரியா ரூ. 48 போனா எப்படி வியா பாரம் செய்யுறது? இதை குறைங் கன்னு எந்த மந்திரிக்கிட்ட சொல்றது; எந்த அதிகாரிய பார்க்கிறதுன்னு தெரி யாம தவிச்சுட்டு இருக்கோம்’’ என்றார்.
தொடர்ந்து பேசிய இன்னொரு வெண்ணெய் வியாபாரியான வி.எஸ்.பொன்னு சாமி, ‘‘இப்பெல்லாம் பசு வெண் ணெய்யைத்தான் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துறாங்க. ஆனா, எருமை வெண்ணெய் மாதிரி பசு வெண்ணெய் அவ்வளவு வெள்ளையா, சுத்தமா இருக்காது. எருமை வெண்ணெய்யை உருக்கினா ஏழு ஊருக்கு மணக்கும். பசுமாட்டு வெண்ணெய்யைவிட கூடுதலான சத்து இதுல இருக்கு.
அதிகமான நோய் எதிர்ப்புச்சக்தி இருக்கதால டாக்டர்களே இப்ப எருமை வெண்ணெய்யைத்தான் சிபாரிசு பண்றாங்க. ஆனாலும் மக்களுக்கிட்ட விழிப்புணர்வு இல்லை. கடந்த நாற்பது வருஷமா நான் இந்தத் தொழிலில் இருக்கேன். போறபோக்கப் பார்த்தா எங்க காலத்தோட ஊத்துக்குளி வெண்ணெய் சகாப்தம் முடிஞ்சிடும் போலிருக்கு’’ என்றார் வாட்டத்துடன். tamilthehindu

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக