ஞாயிறு, 2 அக்டோபர், 2016

சசிகலா நடராஜன் தற்போது தமிழ்நாட்டின் சி ஈ ஒ என்கிறார்களே? Sasikala ..Chief Executive officer of Tamil Nadu?

முதல்வர் ஜெயலலிதா அட்மிட்டாகி புதன்கிழமையோடு 6 நாட்கள் கடந்தன. காய்ச்சலும் நீர்ச்சத்து குறைபாடும்தான் காரணம் என்றும், வழக்கமான உணவு உட்கொள்கிறார் என்றும் அப்பல்லோ மருத்துவர்கள் தெரிவித்த நிலையிலும், புதன் இரவு வரை போயஸ்கார்டனுக்கு ஜெய லலிதா திரும்பாமல் இருந்தது அ.தி.மு.க தொண்டர்களுக்கு வருத்தத்தை அளித்தது என்றால், அரசுத் திட்டங்களையும் கட்சி வேட்பாளர் பட்டியலையும் ஜெ. தொடர்ச்சியாக அறிவித்தது அவர் களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.அப்பல்லோவில் அட்மிட் ஆன அடுத்த நாளே இந்து அற நிலையத்துறை, தகவல் தொழில் நுட்பத்துறை சார்ந்த திட்ட அறிவிப்புகளை ஜெ வெளியிடு கிறார். உடல் நலம் குறித்து கவர்னர் உள்ளிட்டவர்கள் அனுப்பிய வாழ்த்துக்கடிதங்களுக்கு நன்றியும், ஜெயங்கொண்டம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானவர் களுக்கு நிதி உதவி அறிவிப்பையும் செய்த முதல்வர், உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவித்ததுமே கட்சியின் வேட்பாளர்கள் பட்டிய லையும் ரிலீஸ் செய்தார்.. காவிரி விவகாரத்தில் அதி காரிகளுடன் ஆலோசனை நடத்தி, மத்திய அரசு கூட்டும் கூட்டத்தில் கலந்துகொள்ள அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமைச் செயலாளர் ராமமோகனராவ், பொ.ப.து.செயலாளர் பிரபாகர் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் ஒரு அறிவிப்பு வருகிறது.  தமிழகப் பொதுத்துறை ஊழியர்களுக்கு 20 சதவீத போனசும் ஜெயலலிதாவால் அறிவிக்கப்படுகிறது. 


மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளை கவனிக்கிறார் என்று ஊடகங்கள், “முதல்வரின் முகாம் அலுவலகமானது அப்பல்லோ’’ என அடைமொழியிட் டன. வீட்டிற்கு செல்லும் வகையில் அவரது உடல் நலத்தில் முன்னேற்றமில்லை என்பதால்தானே இந்த 6 நாட்களும் மருத்துவமனையிலேயே ஜெயலிதாவை வைத்திருந்து டாக்டர்கள் அக்கறையுடன் கவனிக்கிறார்கள்?  அப்படி யுள்ள சூழலில் அவர் ஓய்வெடுக்காமல் தொடர்ச்சியாக அரசுப் பணிகளை கவ னிப்பது அவரது உடல்நலத்தைத்தானே பாதிக்கும்? இதன் பின்னணியில் மறைந் திருப்பது என்ன? அரசு நிர்வாகத்தை செயல்படுத்துவது யார்? என்கிற கேள்விகள் அனைத்து தரப்பிலும் எதி ரொலிக்கவே செய்தன. மத்திய அரசிடமும் இதே கேள்விதான் எழுந்தது.

இது குறித்து சட்டரீதியான அம்சங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் இளங்கோவன், ""மாநிலத்தின் முதல்வர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அவரால் அரசுப்பணிகளை கவனிப்பது சாத்தியமில்லை. அவரது உடல் நலம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடமை தலைமைச்செயலாளருக்கு இருக்கிறது. அவர்தான் முதல்வரின் உடல் நலம் குறித்து மருத்துவர்களோடு ஆலோசித்து உண்மையான அறிக்கையைத் தர வேண்டும். ஆனால்...  நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை: