ஜெயலலிதா
மருத்துவமனையில்
இருந்து நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என அதிமுக-வினர் தமிழகம் முழுக்க கோயில் கோயிலாக பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கட்சிக்கார்கள் பிரார்த்தனையும் வேண்டுதல்களும் ஒருபக்கம் இருக்க… சசிகலா குடும்பத்தின் குலதெய்வம் கோயில் தஞ்சாவூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவெண்ணியூரில் இருக்கிறது. இங்குள்ள அய்யனார் கோயில்தான் சசிகலா குடும்பத்தின் குலதெய்வம். (திருவெண்ணியூர் அய்யனார் கோயில்) கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இந்த கோயிலில் சிறப்பு யாகம் ஒன்றினை நடத்தியிருக்கிறார் சசிகலாவின் சகோதரர் திவாகரன். ஜெயலலிதாவுக்காக அந்த யாகத்தை விடியற்காலையில் தொடங்கி நான்கு மணி நேரத்துக்கு மேலாக நடத்தியிருக்கிறார் திவாகரன். அந்த கோயிலில் இருந்து சற்று தூரத்தில் உள்ளது வெண்ணிக் கரும்பர் கோயில். இதை கரும்பீஸ்வரர் கோயில் என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். இந்த கரும்பீஸ்வரருக்குச் சிறப்பு பூஜைகள் செய்து வணங்கினால் சர்க்கரை நோயின் பாதிப்பு குறையும் என்பது ஐதீகம்.
இந்தக் கோயிலிலும் ஜெயலலிதாவுக்குச் சர்க்கரை நோயின் பாதிப்பு குறைய வேண்டும் என சிறப்பு பூஜைகளை நடத்தியிருக்கிறார் திவாகரன். பூஜை நடத்திய மறுநாள் அதாவது, நேற்று காலை மீண்டும் கரும்பீஸ்வரர் கோயிலுக்குப் போன திவாகரன், ‘அம்மா கண்ணு முழிச்சுட்டாங்க… நம்ம வேண்டுதல் வீண் போகலை… கரும்பீஸ்வரனுக்கு மறுபடியும் பூஜை செய்யணும்…’ என்று சந்தோஷத்தில் சொல்லியிருக்கிறார்.
இப்போது தொடர்ந்து கரும்பீஸ்வரர் கோயிலில் ஜெயலலிதாவுக்காக பூஜைகள் நடக்கிறது. ‘அம்மா எப்படி இருக்காங்கன்னு தெரியாமத்தான் எல்லோரும் தவிச்சிட்டு இருக்காங்க. திவாகரனுக்கு ஒரு தகவல் வருதுன்னா, அது சரியாதான் இருக்கும். அம்மா நல்லா இருக்காங்கன்னு சசிகலா குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் முதல் தகவல் இதுதான். அப்படின்னா அம்மா நல்லா இருப்பாங்க…’ என்று உணர்ச்சிவசப்பட்டு சொல்கிறார்கள் திவாகரனை நன்கு அறிந்த அதிமுக-வினர். மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக