சனி, 8 அக்டோபர், 2016

160 கேள்விகள் கேட்ட மதுரை போலீஸ் ! பழிவாக்குதல் ? ஐந்தரை மணி நேரம் சசிகலா புஷ்பா பதில்

மதுரை: முன்ஜாமின் கேட்டு, தாக்கல் செய்த மனுவில், போலி கையெழுத்திட்டதாக, சசிகலா புஷ்பா எம்.பி., மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில், நேற்று அவர், மதுரை புதுார் போலீசார் முன் ஆஜராகி, ஐந்தரை மணி நேரம் விளக்கம் அளித்தார்.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட, ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பா, கணவர் லிங்கேஸ்வர திலகம், மகன் பிரதீப் ராஜா உள்ளிட்டோர் மீது, அவரது வீட்டில் பணிபுரிந்த பானுமதி, ஜான்சிராணி அளித்த புகாரின் படி, துாத்துக்குடி போலீசார், பாலியல் வழக்குப்பதிவு செய்தனர். இவ் வழக்கில், முன்ஜாமின் கேட்டு சசிகலா புஷ்பா தரப்பில், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், மனு தாக்கல் செய்யப்பட்டது. சிங்கப்பூரில் இருந்த சசிகலா புஷ்பா, 'மதுரை வந்து, வழக்கறிஞர் முன், முன்ஜாமின் வக்காலத்து மனுவில் கையெழுத்திட்டேன்' என, தெரிவித்திருந்தார். இதில் சந்தேகம் இருப்பதாக, அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தொடர் நீதிமன்ற விசாரணைக்கு பின், 'செப்., 13ல், வழக்கறிஞர் முன்னிலையில், கையெழுத்திட்டதாக, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர், போலி மனு தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றியுள்ளனர்; போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்' என, நீதிமன்றம் உத்தரவிட்டது; வழக்கு பதியப்பட்டது. இவ்வழக்கில், நேற்று காலை, கணவர் மற்றும் மகனுடன் சசிகலா புஷ்பா, புதுார் ஸ்டேஷனில், ஆஜரானார். கணவன், மகனிடம், தலா, 80 கேள்விகளும், சசிகலா புஷ்பாவிடம், 160 கேள்விகளும் கேட்கப்பட்டு, பதில் பெறப்பட்டன. அனைத்து நடவடிக்கைகளும், 'வீடியோ'வில் பதிவு செய்யப்பட்டன. பின், விசாரணை முடிந்து, மாலை, 5:15 மணிக்கு வெளியே வந்தனர்.
இதற்கிடையே, முன்ஜாமின் மனுவில் இடம்பெற்றது, சசிகலா புஷ்பாவின் கையெழுத்து தானா என உறுதி செய்வதற்காக, அவரிடம் கையெழுத்திடுமாறு, போலீசார் கூறினர். சசிகலா புஷ்பா, 'கோர்ட் உத்தரவிட்டால் கையெழுத்திட தயார்' எனக் கூறி மறுத்து விட்டார்.தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: