சனி, 8 அக்டோபர், 2016

அனைத்து கட்சி குழு.... அ.தி.மு.க.,வுக்கு 2 நாள் கெடு: உண்ணாவிரதத்தில் ஸ்டாலின் அறிவிப்பு

தஞ்சாவூர்:''அ.தி.மு.க., அரசு, அனைத்துக் கட்சி தலைவர்களுடன், பிரதமரை சந்திக்க தவறும்பட்சத்தில், தி.மு.க., சார்பில், அதை செய்வோம்,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் பேசினார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, தஞ்சாவூர், தபால் நிலையம் முன், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், உண்ணாவிரத போராட்டம், நேற்று நடந்தது. போராட்ட முடிவில், ஸ்டாலின் பேசியதாவது:
காவிரி பிரச்னையை மையமாக வைத்து, டெல்டா விவசாய மக்கள், பல்வேறு துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். மத்திய அரசு, தமிழக விவசாயிகளை வஞ்சித்து விட்டது; தமிழக அரசு, விவசாயிகளின் உரிமைகளை அடமானம்வைத்து விட்டது.


முதல்வர் ஜெயலலிதா, அண்டை மாநிலங்களோடு இணக்கமாக இல்லாததே, இத்தனை சிக்கல்களுக் கும் காரணம். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து, மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரி யம் அமைக்க தவறிவிட்டது. மத்திய அரசு நிலைப் பாட்டால், இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவில், பெரும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

தமிழக விவசாயிகள், மத்திய அரசின் துரோகத்தை மன்னிக்க மாட்டர். 50எம்.பி.,க்களை வைத்துள்ள அ.தி.மு.க., பிரதமரை சந்திக்க முடியவில்லை என, நாடகமாடுகிறது. கர்நாடகத்திலும், கேரளாவிலும், தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டில், அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

ஆனால், உரிமையை நிலைநாட்ட, அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி விவாதிக்கலாம் என்றால், அதற்கு, தமிழக அரசு மறுக்கிறது. இரு நாட்களில், அ.தி.மு.க., அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

பின், அனைத்துக் கட்சி தலைவர்களுடன் சென்று, பிரதமரை சந்திக்க வேண்டும். இல்லையென்றால், தி.மு.க., அந்த பணியை செய்யும்.இவ்வாறு அவர் பேசினார்.   தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: