சனி, 8 அக்டோபர், 2016

கவர்னர் கொடுத்த ஐடியா – யோசனையில் சசிகலா!


‘எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கவர்னரைப் பார்க்க நேற்று மாலை கிளம்பிப்போனதும், பல்வேறு பேச்சுகள் கிளம்பின. பன்னீர் செல்வம் பொறுப்பு முதல்வர், எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் என்பது வரை அரசியல் வட்டாரத்தில் பேச்சு பரவியது. சேலத்திலோ இன்னும் ஒருபடி மேலே போய், பழனிசாமியின் வீட்டுக்கு முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்தும் இருந்தார்கள். பழனிசாமியைத் துணை முதல்வராக அறிவித்தால் உடனடியாக பட்டாசு வெடித்து கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளுடன் தயாராக இருந்தனர். பழனிசாமி வீட்டில் இருந்தவர்களுக்கு இந்த தகவல் தெரிந்து, பதறிப்போய் வெளியே வந்து வீட்டுக்கு வெளியே இருந்தவர்களை சத்தம் போட்டு அனுப்பியிருக்கிறார்கள்.
காவிரி பிரச்னை தொடர்பாக விவாதிக்கத்தான் அமைச்சர்கள் வந்தார்கள் என அத்தனை யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது கவர்னர் மாளிகை செய்தி குறிப்பு. அதில் அப்படி சொல்லப்பட்டு இருந்தாலும், முதல்வரின் உடல்நிலை பற்றித்தான் கவர்னர் அதிக நேரம் பேசினாராம்.
’மேடம் ஹெல்த் இருக்கும் கண்டிஷன்ல அவங்களுக்கு ரெஸ்ட் அவசியம் தேவை. டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கே வந்தாலும் அவர் வழக்கமான பணிகளை உடனே கவனிக்க முடியாது. ஏற்கெனவே இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிடுச்சு. அரசு பணிகள் முடங்கிவிட்டதாக எல்லோரும் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதை இப்படியே விடவும் முடியாது. அதனால், நீங்கள் உங்கள் கட்சிக்குள் பேசி ஒரு முடிவெடுத்து, பொறுப்பு முதல்வர் அல்லது துணை முதல்வரை உடனடியாக நியமிக்க ஏற்பாடு செய்யுங்கள். அதுதான் உங்களுக்கு நல்லது’ என்று கவர்னர் சொன்னதாக சொல்கிறார்கள். எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பன்னீரும், எடப்பாடியும், ‘அம்மா இப்படி இருக்கும்போது எப்படி நாங்களாக ஒரு முடிவு எடுக்க முடியும்? கொஞ்சம் வெய்ட் பண்ணலாம்…’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு கவர்னர், ‘அவங்க உடல்நிலை சரியாக இருந்தால் நான் இப்படி உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமே இருந்திருக்காது. அதுவும் இரண்டு வாரங்களை கடத்து விட்டதால்தான் சொல்றேன். நீங்க பேசிட்டு சொல்லுங்க!’ என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.
கவர்னர் மாளிகையில் இருந்து வெளியே வந்த பன்னீரும், பழனிசாமியும் நேராக கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர் வீட்டுக்குப் போயிருக்கிறார்கள். அங்கே அரைமணி நேரத்துக்கும் மேலாக இருவரும் டிஸ்கஷன் செய்திருக்கிறார்கள். அதன்பிறகு, மீண்டும் இருவரும் அப்பல்லோ போனார்கள். அப்பல்லோவில் இரண்டாவது தளத்தில் உள்ள ரிசப்சனில் இருவரும் காத்திருந்தார்களாம். சற்று நேரத்துக்குப் பிறகு அவர்களை உள்ளே அழைத்திருக்கிறார் சசிகலா. கவர்னர் சொன்ன தகவல்களை சசிகலாவிடம் சொல்லியிருக்கிறார்கள் இருவரும். அமைதியாக அத்தனையும் கேட்டுக் கொண்டாராம் சசிகலா. ‘என்ன செய்யலாம்னு யோசிப்போம்...’ என்று மட்டும் சசிகலா சொல்லியிருக்கிறார். இருவரும் அதற்கு மேல் எதுவும் பேசாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள். சசிகலா என்ன முடிவெடுப்பார் என்பது இனிதான் தெரியும்” என்பதுதான் அந்த ஸ்டேட்டஸ். அதற்கு லைக் போட்டதுடன், ஷேரும் செய்தது வாட்ஸ் அப்.
அப்பல்லோ வாசலில் இருந்து அடுத்த அப்டேட்களை கொடுக்க ஆரம்பித்தது வாட்ஸ் அப். “முதல்வர் மருத்துவமனையில் அட்மிட் ஆனதில் இருந்தே அமைச்சர்கள் யாரும் இன்னும் சொந்த ஊருக்குப் போகவில்லை. சில அரசு நிகழ்ச்சிகளில் அவசியம் கலந்து கொண்டே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் இருந்தவர்கள் மட்டும் போய்விட்டு உடனே வந்துவிட்டார்கள். தினமும் காலையில் எழுந்ததும் அமைச்சர்கள் எல்லோரும் நேராக வருவது அப்பல்லோவுக்குத்தான். முன்பு அமைச்சர்களைப் பார்க்க கட்சிக்காரர்களும், ஊர்க்காரர்களும் அவர்களது பங்களா வாசலில் காத்திருப்பார்கள். கடந்த இரண்டு வாரங்களாக விசிட்டர்ஸ் யாரையும் அமைச்சர்கள் சந்திப்பது இல்லை. வீட்டுப்பக்கம் யாரும் வரவே வேண்டாம் என்பதை தனது உதவியாளர்கள் மூலம் ஸ்டிரிக்ட் ஆக சொல்லிவிட்டார்கள். அதனால், அமைச்சர்கள் பங்களாக்களும் தற்போது வெறிச்சோடித்தான் கிடக்கிறது. அப்பல்லோவுக்கு யார் வந்தாலும் அவர்களை முதலில் வரவேற்கும் பொறுப்பை மருத்துவமனை நிர்வாகம்தான் கவனிக்கிறது. அதன் பிறகு தேவைப்பட்டால் மட்டும் அவர்களுடன் அமைச்சர்களோ, தம்பிதுரையோ பேசுகிறார்கள். அமைச்சர்களில் ஜெயலலிதாவின் உடல்நிலையை பற்றிப் பேச பன்னீர்செல்வம், விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவர்களை தவிர தம்பிதுரைக்கும் பேசுவதற்கான அனுமதி கொடுத்திருக்கிறார் சசிகலா. ‘முதல்வரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவர் குணமடைந்து வருகிறார். பரிபூரண குணமடந்து விரைவில் வீடு திரும்புவார். நீங்க வந்த தகவலை அம்மாவின் கவனத்துக்கு தெரியப்படுத்துகிறோம்’ என்பதை தாண்டி அவர்கள் யாரும் எதுவும் பேசுவதில்லை. இதை மட்டும்தான் பேச வேண்டும் என்பதும் அவர்களுக்கான உத்தரவு” என்ற மெசேஜ் முதலில் வந்து விழுந்தது.
‘இன்றைக்கு யாரெல்லாம் வந்தாங்க?’ என்று ஃபேஸ்புக் கேட்க... அதற்கும் பதிலை படபடவென டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப். “காலையில் இருந்தே அமைச்சர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கிவிட்டனர். வழக்கம்போல தம்பிதுரையும் வந்துவிட்டார். தம்பிதுரையும், பன்னீரும் மட்டும் இரண்டாவது தளத்தில் உள்ள ரிசப்ஷனுக்கு போவதும் வருவதுமாக இருக்கிறார்கள். மற்ற அமைச்சர்கள் எல்லோரும் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் காத்திருப்பது வழக்கம். இன்று எடப்பாடி பழனிசாமியும் சர்வ சாதாரணமாக இரண்டாவது தளத்துக்கு போய் வந்தாராம். பன்னீருடன் அதிகம் நெருக்கம் காட்ட ஆரம்பித்துள்ளார் எடப்பாடி.
வைகோ, கிருஷ்ணசாமி ஆகியோரும் இன்று வந்தார்கள். அவர்களிடம் அமைச்சர் பன்னீரிடம்தான் பேசினார்கள். அவர்களிடமும் பன்னீர் வழக்கமான பதிலை சொல்ல... அதையே அவர்கள் மீடியாவுக்கும் சொல்லிவிட்டுப் போனார்கள்'" என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப்லைனில் போனது

கருத்துகள் இல்லை: