முதல்வர்
ஜெயலலிதா உடல் நிலை குறித்த உண்மையான அறிக்கையை
வெளியிடக்கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் "தமிழக மக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும் ஜெ.வின் உடல்நிலை குறித்து அறிய ஆவலாக உள்ளது. வதந்திகள் அவ்வப்போது பரவுவதால் கிரீம்ஸ் சாலை, திருவேற்காடு பகுதிகளில் கடையடைப்பு நடந்து வருகிறது. மேலும் கவர்னர், மத்திய அமைசார் போன்றோர் மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளனர். யாரும் முழுமையாக தகவல்களை வெளியிடவில்லை. மருத்துவமனையும் அவ்வப்போது முழுமையில்லாத அறிக்கை வெளியிட்டு வருகிறது. முதல்வரின் உடல்நலம் குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை என கமிஷ்னர் அறிவுத்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரின் புகைப்படத்தை வெளியிட எதிர்கட்சி உள்ளிட்டோர் வலியுறுத்தி கொண்டுயிருக்கிறார்கள். காவிரி உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளுக்கு யார் முடிவெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. 01.10.2016 கவர்னர், தலைமை செயலாளர், காவல்துறை ஆணையர், மருத்துவமனை நிர்வாகம் ஆகியோரிடம் மனு கொடுத்தும் பதில்லை. முதல்வர் உடல் நலம்பெறும் வரை தற்காலிகமான முதல்வரை நியமிக்க வேண்டும். வழக்கமான சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்படும் நிலையில், தற்போது எந்த புகைப்படமும் வெளியிடபடவில்லை. எனவே அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருடன் நடைபெறும் கூட்டத்தின் புகைப்படங்களை>நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். எனது மனுவையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.
இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆர்.மகாதேவன் முன்னிலையில் அவசர வழக்காக விசாரிக்க முறையீடு செய்தார். ஆனால் மனுவை தாக்கல் செய்யுங்கள் விசாரணைக்கு வரும் என நீதிபதிகள் அறிவுறுத்தியதன் அடிப்படையில் மனுவாக தாக்கல் செய்துள்ளார். டிராபிக் ராமசாமியின் இந்த மனு நாளை அல்லது நாளை மறுதினம் விசாரணைக்கு வரவுள்ளது. நக்கீரன்,இன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக