வெள்ளி, 7 அக்டோபர், 2016

தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்: சுப்ரமணியன் சுவாமி

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்துக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22-ம் தேதி இரவு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் தொடர்ந்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து நேற்று அறிக்கை வெளியிட்ட அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அவருக்கு நீண்ட நாள்கள் சிகிச்சை தேவை என்று தெரிவித்தது.  இந்நிலையில் தான், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டிவிட்டரில் தெரிவித்திருப்பதாவது, தமிழ்நாட்டில் 6 மாதங்களுக்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும். அப்போதுதான், ஜெயலலிதாவால் முழுமையாக மருத்துவமனை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும். சட்டம் ஒழுங்கின் நிலை மிகவும் மோசமாக உள்ளது” என்று அதில் குறிப்பிட்டுள்ளார் dinamani.com

கருத்துகள் இல்லை: