புதன், 5 அக்டோபர், 2016

கடைசி நேரத்தில் தமிழகத்தின் கை நழுவிய காவிரி.. நாடகம் நடத்திய கர்நாடகா

டெல்லி: காவிரி பங்கீடு விவகாரத்தில் முதலில் வெற்றிகளை சுவைத்து வந்த தமிழகம் தற்போது குப்புற தள்ளிவிடப்பட்டுள்ளது. தனது பல்வேறு வகையான துரித நடவடிக்கைள் மற்றும் ராஜதந்திரங்கள் மூலம், கர்நாடகா ஒரு சொட்டு தண்ணீரையும் 'திறந்துவிட மாட்டோம்' என்ற தனது பிடிவாதத்தில் ஜெயித்துவிட்டது. நடுவர் மன்ற உத்தரவுப்படி, ஆகஸ்ட் மாதத்தில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய சுமார் 50 டிஎம்சி தண்ணீரை திறக்க உத்தரவிடுங்கள், என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுதான், இந்த பிரச்சினையின் ஆரம்ப புள்ளி. கடந்த மாதம் 2ம் தேதி நீதிமன்றம் பிறப்பித்த தனது முதல் உத்தரவில், அடுத்த 10 நாட்களுக்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு கர்நாடகா எதிர்ப்பு தெரிவித்த போதிலும், உச்சநீதிமன்ற உத்தரவை மீற முடியாது என்பதால் தண்ணீரை திறந்துவிட்டது. 
 
இதற்கு கர்நாடகா முழுவதும் எதிர்ப்பு எழுந்தது. முதலமைச்சர் சித்தராமையாவின் உருவப்படம் பல்வேறு இடங்களில் கொளுத்தப்பட்டது. சீராய்வு மனு இந்நிலையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. தங்களுக்கே குடிக்க தண்ணீர் இல்லையென்றும், இதனால், தண்ணீர் திறக்கும் உத்தரவு மீது உடனடி மறு உத்தரவு பிறப்பிக்க கர்நாடகம் கோரிக்கை விடுத்தது. தமிழர் மீது தாக்குதல் இதனிடையே, தமிழகத்திற்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் கருத்து வெளியிட்ட பெங்களூரை சேர்ந்த, தமிழக இளைஞர் மீது தாக்குதல் நடத்திய கன்னட அமைப்பினர் சிலர், அதனை இணையத்தில் பதிவேற்றி மகிழ்ந்தனர். இதனை அடுத்து, தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்ததுடன், கன்னட பதிவு எண் கொண்ட வாகனங்கள் மீது தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. சாடிய சுப்ரீம்கோர்ட் இதையடுத்து செப்டம்பர் 12ம் தேதி மீண்டும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, கர்நாடகாவில் நடைபெறும் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம், தண்ணீரை திறக்கும் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்ததுடன், மேலும் 3 நாட்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்கவும் உத்தரவிட்டனர். செப்டம்பர் 17ம் தேதி வரை 15,000 கன அடி தண்ணீர் திறக்கவும், 18, 19, 20 ஆகிய தேதிகளில் 12,000 கன அடி தண்ணீர் திறக்கவும் உத்தரவிடப்பட்டது

Read more a tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: