சனி, 8 அக்டோபர், 2016

ஹிட்லர் ஒரு போதை விரும்பி! ஹிட்லர் மட்டுமா .....?


உலக வரலாற்றில் இரக்கமற்ற சர்வாதிகார தலைவர்கள் பட்டியலில் அடோல்ஃப் ஹிட்லர் முதலிடத்தில் இருப்பவர். இரண்டாம் உலகப்போரின் போது ‘நாஜி’ படைகள் மூலம் ஆட்சியமைத்த இவரைப் பற்றி வரும் தகவல்கள் ஒன்றை விட ஒன்று ஆச்சர்யமூட்டுவதாகவும் அதிர்ச்சியளிப்பதாகவும் உள்ளது.
தற்போது அவர் போதைப்பொருளுக்கு அடிமையாக இருந்தார் என்ற புதிய தகவல்வெளியாகி உள்ளது. ஜெர்மனியை சேர்ந்த விருது பெற்ற எழுத்தாளர் நார்மன் ஓக்லர் என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். ‘டிரக்ஸ் இன் நாஜி ஜெர்மனி’ என்று பெயரிடப்பட்டுள்ள இதில் சர்வாதிகாரி ஹிட்லர் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அந்த புத்தகத்தில் ஹிட்லர் போதை பொருட்களுக்கு அடிமையாக இருந்தார். ஹெராயின் போன்ற ‘இயூகோடெல்’ என்ற ஒருவித போதை பொருளை உட்கொண்டு வந்தார்.மேலும் போதை மருந்துகளை ஊசி மருந்து மூலம் உடலுக்குள் செலுத்தினார். அதனால் அவரது ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் அனைத்தும் படிப்படியாக செயல் இழந்து விட்டன.
அதன் பாதிப்பு கடந்த 1944-ம் ஆண்டில் தெரியவந்தது.போதைபொருள் பழக்கமே இரண்டாம் உலகப்போரின் மீது தவறான முடிவுகள் எடுக்க செய்ததற்கு காரணம். தான் ஒரு அதிமேதாவி என்ற அளவுக்கு மீறிய தன்னம்பிக்கையின் மூலம் பின்னடைவை ஏற்படுத்தி அவரது வாழ்வில் துயரமான முடிவை மேற்கொள்ள செய்தது போதை என அப்புத்தகத்தின் எழுத்தாளர் வாயிலாக கூறியுள்ளார்.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: