வெள்ளி, 7 அக்டோபர், 2016

கலைஞர் கேட்கவா போகிறார்..? திமுக இனி தனித்தே போட்டியிடவேண்டும் .. வலுக்கும் குரல்

காங்கிரஸ் காரர்கள் திமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டே இரட்டை
இலைக்கே வாக்களிப்பது வழக்கம்
அதிமுக அவர்களுக்கு போதிய இடம் அளிக்க முன் வராததால்தான் ...அவர்கள் திமுகவிடம் வருகிறார்கள்.
அவர்களுக்கு நிரந்தர நட்பு ஜெயாவுடன் மட்டுமே...
கலைஞர் எதிர்ப்பு காங்கிரஸ் காரன் இரத்தத்தில் ஊரறிய பண்பு..
திமுக வலிந்து காங்கிரஸுடன் கூட்டணி வைத்தே தேய்ந்தது..
ராகுல் கலைஞரை ஒரு பொருட்டாகவே என்றுமே மதித்தது இல்லை.
இன்னும் சொல்ல எவ்வளவோ இருக்கிறது...
என்ன பயன்..கலைஞர் கேட்கவா போகிறார்..? தலைவர் கலைஞர் இனியாவது
ஒரு தெளிவான உறுதியான முடிவெடுத்து அறிவிக்கவேண்டும்..
இனி வரும் எல்லா தேர்தல்களிலும்
திமுக தனித்தே போட்டியிடும்...என்று முடிவு எடுக்கவேண்டும்.

தமிழக மக்களின் நலன் ஒன்றையே முன்வைத்து
கொள்கைக்காக...
தன்மானத்தோடு போராடுவோம்...
தேர்தல்...பதவிகளுக்காக ...குறுக்கும் நெடுக்குமாக
சமரசங்கள் செய்து கொள்ளாமல் ...
நேர்மையுடன் போராடினால்...
மக்கள் நம்பிக்கையும் ஆதரவும் நம்மை தேடி வரும்..
நமக்கு யார் தயவும் தேவை இல்லை.
மக்கள் தயவு மட்டுமே போதும்.
அப்போதுதான்...பெரியார் அண்ணா கண்ட இந்த திராவிட இயக்கம் செழித்து வளரும்..
திமுக வழி தவறினால் திராவிட இயக்கம் வலுவிழந்து விடும்..
தமிழர்கள் மீண்டும் அடிமைகளாகி விடுவார்கள்     ... முகநூல் பதிவுசென்னை  தாமோதரன்

கருத்துகள் இல்லை: