சனி, 8 அக்டோபர், 2016

ஐ.எஸ் அமைப்புக்கு சிவகாசி வெடிமருந்து!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அம்மாநிலத்தை சேர்ந்த 21 பேர் ஏற்கனவே ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து விட்டதாக வாட்ஸ்-அப் மூலமாக உறவினர்களுக்கு தகவல் சொல்லியிருந்தனர்.இதுகுறித்த தகவலை கேரள போலீசார், டெல்லியை சேர்ந்த தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகளுக்கு தெரிவித்தனர்.இதை தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கேரளாவுக்கு விரைந்து சென்று அங்கு விசாரணை நடத்தினர். அப்போதுதான் கண்ணனூர் கனகமலை உச்சியில் 6 பேர் ரகசிய கூட்டம் நடத்தியது தெரியவந்தது. இவர்கள் 6 பேரும், ஏற்கனவே ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்துள்ள 21 பேர் மூலமாக தீவிரவாத இயக்கத்தில் சேருவதற்கு திட்டம் தீட்டியதுவிசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.
இவர்களில் சென்னை கொட்டிவாக்கத்தில் முகமது என்கிற தீவிரவாதி பதுங்கி இருந்ததும் தெரிய வந்தது அவர்களை விசாரித்ததில் 6 பேரும் ஐ.எஸ் தீவிரவாதிகள்தான் என்பதும் உறுதியானதுஅத்தோடு கோவை மற்றும் நெல்லையில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு உளவு தகவல்கள் பரிமாறப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கோவை சென்று 5 வாலிபர்களை பிடித்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்த செய்தியின் வீரியம் குறையும் முன்னே கடையநல்லூரில் பிடிபட்ட சுபஹணி காஜா மொய்தீன் என்கிற வாலிபர் ஐ.எஸ். தீவிரவாதியாக செயல்பட்டிருப்பது பதற்றத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.31 வயது இளைஞரான இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் நீண்டகாலமாகவே கடைய நல்லூரில் தங்கி இருந்துள்ளார். அங்கு நகை கடை ஒன்றில் பணியாற்றி வந்த காஜா மொய்தீன், இணைய தளம் மூலமாக ஐ.எஸ். இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டுள்ளார்.சென்ற ஆண்டு சென்னையில் இருந்து துருக்கிக்கு சுற்றுலா விசாவில் சென்றுள்ளார். அங்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமானோர் ஐ.எஸ். இயக்கத்தில் சேருவதற்காக தேர்வு செய்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுடன் காஜா மொய்தீனும் சேர்ந்து கொண்டார். பின்னர் 2 வாரங்கள் அங்கு தங்கி இருந்து ஆயுத பயிற்சி பெற்றுள்ளார்.இந்த போர் பயிற்சியின் போது ஐ.எஸ். இயக்க நடவடிக்கைகள் பிடிக்காமல், அதில் இருந்து விலக முடிவு செய்ததால், சித்தரவதை செய்யப்பட்டுள்ளார். பின்னர் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இருந்து விடுபட்டு, துருக்கி வந்து இந்திய தூதரக அதிகாரிகளின் துணையோடு இந்தியா திரும்பினார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு மீண்டும் திரும்பிய காஜா மொய்தீன் அதன் பின்னரும் ஐ.எஸ். தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டே வந்துள்ளார்.சென்னை மற்றும் கோவையில் செயல்பட்டு வரும் ஐ.எஸ். ஆதரவாளர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த காஜா மொய்தீன், அவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வெடி மருந்துகளையும் சப்ளை செய்துள்ளார். இதனை சிவகாசியில் இருந்து இவர் வாங்கி இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கோவை, நெல்லை, சென்னை உள்ளிட்ட பகுதிகளிலும் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளாவை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் தமிழகத்தில் மேலும் பதுங்கி இருக்கிறார்களா? என்பது பற்றி விசாரிப்பதற்காக கடையநல்லூர் தீவிரவாதியான காஜா மொய்தீனை காவலில் எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர். அவரிடம் நடத்தப்படும் இந்த விசாரணையின் போது மேலும் கூடுதல் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மின்னம்பலம்,காம்

கருத்துகள் இல்லை: