செவ்வாய், 4 அக்டோபர், 2016

சத்தியம் திரையரங்கில் தர்மதுரை ,ரெக்கை, ஆண்டவன் கட்டளை... விஜய் சேதுபதியின் மூன்று படங்களும் .... சாதனை .

விஜய் சேதுபதி நடிப்பில் வருகிற 7-ந் தேதி ‘றெக்க’ படம்
வெளியாகவிருக்கிறது. அந்த படத்தோடு விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் 6 படங்கள் வெளியாகியுள்ளது. அதில், முக்கால்வாசி படங்கள் நல்ல வசூலை பெற்றுள்ளன. இந்நிலையில், எந்த நடிகருக்கும் கிடைக்காத பெருமை ஒன்று அவருடைய படங்களுக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால், விஜய் சேதுபதி நடித்த ‘தர்மதுரை’ படம் கடந்த ஆகஸ்ட் 19-ந் தேதி ரிலீஸ் ஆனது. அதைத் தொடர்ந்து அவர் நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ படம் செப்டம்பர் 23-ந் தேதி வெளியானது. இந்நிலையில், வருகிற 7-ந் தேதி அவர் நடித்த ‘றெக்க’ படமும் வெளியாகவிருக்கிறது.


இரண்டு மாதங்களுக்குள் அவர் நடிப்பில் மூன்று படங்கள் வெளியாகியுள்ள நிலையில், சென்னை சத்யம் திரையரங்கில் ஏற்கெனவே விஜய் சேதுபதியின் ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்கள் ஓடிக் கொண்டிருக்கிறது. மூன்றாவதாக வரும் வெள்ளி முதல் ‘றெக்க’ படமும் வெளியாகவுள்ளது.

வெள்ளிக்கிழமை பார்த்தால் சத்யம் திரையரங்கில் விஜய் சேதுபதி நடித்த மூன்று படங்களும் திரையிடப்பட்டு இருக்கும். சத்யம் திரையரங்க வரலாற்றிலேயே ஒரு நடிகர் நடித்த மூன்று படங்கள் திரையிடப்படுவது இதுதான் முதல்முறை என்று கூறப்படுகிறது. இந்த பெருமையை விஜய் சேதுபதி பெற்றிருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.தினமலர்.காம்

கருத்துகள் இல்லை: