ஞாயிறு, 2 அக்டோபர், 2016

அனல் , அணு மின் நிலயங்களுக்கு உச்ச கட்ட பாதுகாப்பு ..

மத்திய அரசு உத்தரவால், தமிழகத்தில் உள்ள அனல், அணு மின் நிலையங்களுக்கு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, சென்னை, எண்ணுார், சேலம், துாத்துக்குடியில் அனல் மின் நிலையங்கள் உள்ளன. மத்திய அரசுக்கு, காஞ்சிபுரம், நெல்லை,
திருவள்ளூர், துாத்துக்குடி,கடலுாரில், அனல் மற்றும் அணு மின் நிலையங்கள்
உள்ளன; இங்கு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரி ராணுவ முகாமில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பயங்கரவாதிகள் முகாம்கள் மீது, இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனால், நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்கும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: சேலம், மேட்டூர் தவிர, மற்ற மின் நிலையங்கள், கடலை ஒட்டி அமைந்துள்ளன. மத்திய மின் நிலையங்களில், தொழில்
பாதுகாப்பு படையினரும், மாநில மின் நிலையங்களில், முன்னாள் ராணுவ
வீரர்களும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். மத்திய அரசின் அறிவுறுத்தல்படி, மின் நிலைய வளாகங்கள், அதை சுற்றியுள்ள பகுதிகளில், போலீசார் தீவிர ரோந்து சென்று, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மின் நிலையங்களில் உள்ள ஒப்பந்த ஊழியர்கள், கடும் சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.  தினமலர்.காம்

- நமது நிருபர்

கருத்துகள் இல்லை: