தமிழகத்தையே
உலுக்கிய கிரானைட் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பி. ஆர்.
பழனிச்சாமியை இரண்டு வழக்கிலிருந்து விடுதலைச் செய்ததுடன், வழக்கு தொடர்ந்த
மாவட்ட ஆட்சியர் மற்றும் 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு
பரபரப்பை ஏற்படுத்தியவர் மேலூர் மாவட்ட நீதிபதி மகேந்திரபூபதி.
இப்போது தன்னுடைய சாதியை சேர்ந்த பி.ஆர்.பழனிச்சாமியை காப்பாற்றுவதற்கு நீதியை நரபலி கொடுத்திருக்கிறார் நீதிபதி மகேந்திரபூபதி.
தன் சாதியை சார்ந்த எளிய உழைக்கும் மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பக்கம் நின்று நீதியை வழங்காமல் இந்த பெருமுதலாளியின் பக்கம் நிற்பதிலேயே இது என்ன மாதிரியான சாதி பற்று என்னும் கேள்வி எழுகிறது. சாதி என்பது எப்போதும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது, அவர்களை கூறு போட்டு பிரித்து வைப்பது என்ற புரட்சியாளர் அம்பேத்கரின் கூற்று தான் விடையாக தெரிகிறது" என்று கூறியுள்ளார்.
படம்: சே.சின்னதுரை விகடன்.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக