சென்னை: தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக -
காங்கிரஸ் கட்சிகளிடையே 40 தொகுதிகளில் நேரடியான போட்டி நிலவுகிறது.
காங்கேயத்தில் மட்டும் அதிமுக கூட்டணி கட்சியான கொங்கு இளைஞர் பேரவை
தனியரசுடன் காங்கிரஸ் கட்சிக்கு நேரடி ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்காக திமுக-காங்கிரஸ் நடுவே கூட்டணி ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு திமுக 41 தொகுதிகளை ஒதுக்கியது. இதற்கான ஒப்பந்தம்
திமுக தலைவர் கருணாநிதி மற்றும் காங்கிரஸ் மேலிடத் தலைவர் குலாம் நபி ஆசாத்
ஆகியோர் சந்திப்பில் இறுதியானது.
Direct challenge between admk and congress 40 constituencies
இந்நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தைகளும் சுமூகமாக நடந்து
முடிந்துள்ள நிலையில், ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதையடுத்து தற்போது
காங்கிரஸ் போட்டியிடும் 41 தொகுதிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டன.
அந்த 41 தொகுதிகள் எவையெவை என்பதற்கான பட்டியலை தமிழக காங்கிரஸ் கட்சியின்
தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று வெளியிட்டார். அதில் காங்கிரஸ்
போட்டியிடுவதாக அறிவித்துள்ள 40 தொகுதிகளில் ஆளும் அதிமுக நேரடியாக
போட்டியிடுகிறது. மேலும் காங்கேயத்தில் மட்டும் கொங்கு இளைஞர் பேரவை
கட்சியுடன் காங்கிரஸ் கட்சிக்கு போட்டி நிலவுகிறது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு
அங்கு போட்டியிடுகிறது. மேலும் அவர் இரட்டை இலை சின்னத்திலே
போட்டியிடுவதால். ஏறத்தாழ காங்கிரஸ் போட்டியிடும் அனைத்து தொகுதியிலும்
அதிமுக - காங்கிரஸ் நேரடியாக மோதுவதாக கூறப்படுகிறது.
அதேபோல் காங்கிரஸ் போட்டியிடும் திருமங்கலம், குளச்சல், முதுகுளத்தூர்
உள்ளிட்ட 12 தொகுதிகளில் காங்கிரஸ், பாஜக, அதிமுக இடையே நேரடி போட்டி
ஏற்பட்டுள்ளது
Read more at:://tamil.oneindia.com/n
Read more at:://tamil.oneindia.com/n
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக