டெல்லி,ஏப்.08 (டி.என்.எஸ்) யமுனையில் தனது குடும்பத்தினருடன் குளித்த
பெண் நீதிபதியை போட்டோ எடுத்த போலீஸ்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
டெல்லி மாநகர நீதிமன்றத்தில் பெண் நீதிபதியாக இருக்கும் ஒருவர் தனது கணவர் மற்றும் 7 வயது மகனுடன் யமுனை நதிக்கு சென்று புனித நீராடினார்.
3 நிமிடங்கள் வரை யமுனையில் குளித்து பிரார்த்தனை செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டெல்லி ஜெய்த்பூர் போலீஸ் நிலைய போலீஸ்காரர் பெண் நீதிபதியை தனது செல்போனில் படம் பிடித்தார். இதை நீதிபதி பார்த்து விட்டார்.
உடனே போலீஸ்காரரைப் பார்த்து ஏன் போட்டோ எடுக்கிறீர்கள் என்று தட்டிக்கேட்டார். இதனால் போலீஸ்காரர் பெண் நீதிபதியிடம் தவறாக நடக்க முயன்றதுடன் பொய் வழக்கு போடுவேன் என்றும் மிரட்டினார்.
இதையடுத்து பெண் நீதிபதி போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின் போலீஸ்காரர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். /tamil.chennaionline.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக