வெள்ளி, 8 ஏப்ரல், 2016

விஜயகாந்த் வீட்டில் நள்ளிரவு யாகம்...முதல்வர் பதவிக்காக

விஜயகாந்த் வீட்டில், நேற்று முன்தினம் நள்ளிரவு ரகசிய யாகம் நடந்துள்ளது. தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:தஞ்சாவூரில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வேத விற்பனர்கள், நேற்று முன்தினம் காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.
வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். அன்று நள்ளிரவு, விஜயகாந்த் வீட்டிற்கு அவர்கள் வந்தனர்.வீட்டின் கதவுகளை அடைத்து விட்டு, யாகம் நடத்தியுள்ளனர்.   என்னாது.. PROMPTING-பிரேமலதா முதல்வர் ஆகணுமா..? விஜய பிரபாகரன் அரசியல்ல வெற்றி பெறனுமா..? சம்முக பாண்டி சினிமால தொடர்ந்து நடிக்கணுமா..? அடப்பாவிகளா.. மொத்தத்துல உலகம் சீக்கிரமா அழியனும்னு யாகம் பண்ணியிருக்கானுங்க.. என்ன அநியாம்யா இது..?


மஞ்சள் நிற ஈர புடவையில் பிரேமலதாவும், வேட்டி மட்டும் கட்டி, சட்டையின்றி விஜயகாந்தும், இந்த யாகத்தில் பங்கேற்றனர். விஜயகாந்திற்கு, ஒன்பதரை ஆண்டுகள் மட்டுமே நாற்காலி ராசி இருப்பதாக அவரது ஆஸ்தான ஜோதிடர் கூறியுள்ளார்.

அதன்படி, ஏற்கனவே ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாகவும், நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக எதிர்க்கட்சி தலைவராகவும் விஜயகாந்த் இருந்துள்ளார். எனவே, முதல்வர் நாற்காலியில் பிரேமலதாவை அமர வைக்கும் நோக்கத்தில் இந்த யாகம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமின்றி, கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறாமல் இருப்பதற்காகவும் யாகம் நடந்துள்ளது. விஜயகாந்தின் இளைய மகன் விஜய் பிரபாகரனுக்கு அன்றைய தினம் பிறந்த நாள். அவர் சினிமாவில் முக்கிய இடத்தை பிடிக்கவும், நின்றுபோன படத்தின், 'ஷூட்டிங்' தொடரவும் இந்த யாகம் நடந்துள்ளது.

யாகத்தில் வைக்கப்பட்ட குங்குமமும், விபூதியும், கட்சி அலுவலகத்திற்கு வந்த மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு கோவில் பிரசாதம் என்ற பெயரில் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.
10 நிமிடம் மட்டுமே பேச்சு:விஜயகாந்துக்கு சைனஸ் பிரச்னையால், அதிகநேரம் பேச முடியாத சூழல் உள்ளது. அதுமட்டுமின்றி பேச வந்த விஷயங்களை மறந்து விட்டு, வேறு விஷயங்களை பேசுகிறார். இதனால், இதுவரை விஜயகாந்த் பிரசாரத்தில் தலை காட்ட வில்லை.வரும், 10ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில், கூட்டணி தேர்தல் சிறப்பு மாநாடு நடக்க உள்ளது. தற்போதுள்ள நிலையில், விஜயகாந்த் நீண்ட நேரம் பேசினால், சொதப்பி விடுவார் என கூட்டணி கட்சி தலைவர்கள் அஞ்சுகின்றனர். இதற்காக, அவரை, 10 நிமிடம் மட்டுமே பேச வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, தே.மு.தி.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
தேர்தல் சிறப்பு மாநாட்டில், தே.மு.தி.க., நிர்வாகிகளும், கூட்டணி கட்சி தலைவர்களும், இரவு, 9:50 மணி வரை பேசுவர். அதன் பிறகு விஜயகாந்த், 10 நிமிடம் பேசுவதற்குள், 10:00 மணி ஆகிவிடும். தேர்தல் கமிஷன் விதிப்படி, 10:00 மணிக்கு கூட்டத்தை முடித்து விடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: