புதன், 6 ஏப்ரல், 2016

திருமாவளவன்,ஜி.ராமகிருஷ்ணன் வருத்தம்.... வைகோவின் கலைஞர் மீதான சாதி விமர்சனத்துக்கு பலரும் வருத்தம்..

சென்னை: திமுக தலைவர் கருணாநிதி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனம் செய்து பேசியுள்ளதற்தற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச்செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று சென்னையில் உள்ள மதிமுக கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கருணாநிதி குறித்து வைகோ கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். thirumavalavan,G.R, condemns vaiko speech about karunanidhi இது குறித்து கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், திமுக தலைவர் கருணாநிதி மற்றும் தேமுதிக எம்எல்ஏக்கள் தொடர்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டும், சாதீய தொழில் குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்புடையதல்ல என்று ஜி. ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறுகையில், தேமுதிகவில் பிளவை ஏற்படுத்தும் திமுகவின் முயற்சி மக்கள் நலக் கூட்டணிக்கு எதிரானது என்று குற்றம்சாட்டினார். மேலும் திமுக தலைவர் கருணாநிதியை பற்றி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளது குறித்து தனிநபர் விமர்சனத்தில் தமக்கு உடன்பாடில்லை என்றும் ஒருவரை ஜாதி ரீதியாக விமர்சிப்பது தேவையற்ற செயல் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஜாதி ரீதியாக திமுக தலைவர் கருணாநிதி பற்றி பேசியதற்கு வைகோ மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

Read more at: ://tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: