வெள்ளி, 8 ஏப்ரல், 2016

உயிர்பயத்தில் கண்ணதாசன் சித்திரா தம்பதிகள்...சாதி வெறியர்கள் தலைவர்கள் ஆகிறார்கள்..

கடந்த மார்ச் 13 அன்று, உடுமலைபேட்டையில் சங்கர் – கௌசல்யா என்ற இளம் தம்பதியினரை நடுரோட்டில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேவர் சமூகத்தை சேர்ந்த கௌசல்யா, சங்கர் என்ற தலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதே அதற்கு காரணம். இந்த தாக்குதலில் சங்கர் அதே இடத்தில் பலியாக, கௌசல்யா படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த தம்பதியினர் தாக்கப்படும் படங்களை பார்த்து, திருச்சியை சேர்ந்த 28வயதான கண்ணதாசன் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். தனது நிலைமையும் இது போன்று ஆகிவிடுமோ என்ற பயமே இதற்கு காரணம். தலித் சமூகத்தை சேர்ந்த இவர், கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். கடந்த வருடம் இதே சமூக பெண்ணிடம் நட்புடன் பேசியதற்காகவே கோகுல்ராஜ் என்ற இளைஞர் கொல்லப்பட்டிருந்தார்.

இருப்பினும், கண்ணதாசனின் பயம் ஒரு முன்னெச்சரிக்கையாக மாறியது. தான் காதலித்த 21 வயது சித்ராவிற்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடிவு செய்தார். இதனை தொடர்ந்து மார்ச் 23 அன்று ஏற்கனவே திட்டமிட்டபடி தங்கள் திருமணத்தை நாமக்கலில் பதிவு செய்து கொண்டனர். அதன்பின்னர், இது போன்ற தம்பதியினருக்கு பாதுகாப்பு அளிக்கும் ‘கராத்தே’ முத்துகுமார் என்ற வழக்கறிஞரை தொடர்பு கொண்டனர். தங்கள்  திருமணத்திற்கு பின் தலைமறைவாகியுள்ளனர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன் கண்ணதாசன், தனது மனைவி சித்திராவை சந்தித்தார்.திருச்சி அருகேயுள்ள உழன்குடியை சேர்ந்தவர் கண்ணதாசன். அவரது மனைவி அதற்கு அருகேயுள்ள மணச்சநல்லூரை சேர்ந்தவர். பெயிண்டர் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது, சித்ராவை பஸ்ஸில் வைத்து தினந்தோறும் சந்திப்பது வழக்கமாக இருந்தது. பஸ் சந்திப்பு, பின்னர் போனில் இருவரும் பேசுமளவுக்கு மாறியது. அதோடு, கண்ணதாசன் தனது காதலையும் சித்திராவிடம் கூறியுள்ளார்.” எனது பைக்கை எடுத்து கொண்டு சித்ராவிடம் என் விருப்பத்தை கூறினேன். முடிவெடுக்க இரண்டு மாத அவகாசம் வேண்டும் என்றார். ஆனால் கடைசியாக தனது சம்மதத்தை கூறினார்.” என்றார்.

கண்ணதாசனுடன் உள்ள காதல் விவகாரத்தை அறிந்த சித்ராவின் பெற்றோர், அவரிடம் இது பற்றி கேட்டனர். அப்போது, தான் கண்ணதாசனை காதலிக்கவில்லை என கூறி தனது பெற்றோரிடம் நிராகரித்து சித்ரா கூறியுள்ளார்.

ஆனால், சித்ரா கண்ணதாசனுடன் ஒளித்து ஓடிய போது தான் கேள்வியே எழும்பியது. ஏற்கனவே அவர், சித்ராவின் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஓடி செல்ல திட்டமிட்டிருந்தார். அதனை நன்கு திட்டமிட்டு செயல்படுத்தவும் செய்தார். ஆனால், சித்ராவின் குடும்பத்தினர் இருவரும் திருமணம் செய்து கொண்ட அன்று, இந்த சம்பவத்தை அறிந்து கொண்டனர்.

உடனடியாக, இருவரும் அந்த வழக்கறிஞரை தொடர்பு கொண்டு தலைமறைவாகிவிட்டனர்.” நானும் எனது மனைவியும் மிகவும் பயந்து போயுள்ளோம். சித்ராவின் உறவினர்கள் எனது வீட்டிற்கு சென்று, எனது அம்மாவையும், சகோதரனையும் பார்த்து என்னை கொன்று விட போவதாக கூறி மிரட்டி வருகின்றனர். நான் திரும்பி செல்லவில்லையெனில் எனது சகோதரனை சிறைபிடிப்போம் என்று கூறி சென்றுள்ளனர். “ என கண்ணதாசன் கூறினார்.

பெண்ணின் தந்தையும், சித்ரா வீட்டிற்கு திரும்பி வரவேண்டும் இல்லையெனில் கண்ணதாசனை கொன்று விடபோவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.  சித்ராவின் அம்மாவும், தனது மகள் திரும்ப வரவேண்டும், வந்துவிட்டால் அவரை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க போவதாக கூறியதாக  கண்ணதாசன் கூறுகிறார்.

கண்ணதாசனுக்கு தந்தை இல்லை. தனது தாயார் மகாதேவி மற்றும் சகோதரர் ராஜ்குமார் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். சகோதரரும் பெயிண்டர் வேலையே செய்து வருகிறார். சித்ரா, மணச்சநல்லூரில் உள்ள இந்திராகாந்தி கல்லூரியில் எம்.காம் படித்து வருகிறார்.

புதுமண தம்பதிகள் விரும்புவதெல்லாம், கண்ணதாசனின் வீட்டிற்கு சென்று, சித்ராவின் உறவினர்களால் தாக்கப்படுவோம் என்ற பயம் இல்லாமல் வாழ வேண்டும் என்பது தான்.

இதற்கிடையே, வழக்கறிஞர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதுபற்றி கூறும் போது, “உள்ளூர் போலீசார் பெண்ணின் தந்தைக்கு உதவுவதால், நான் எஸ்பியை நேரில் கண்டு புகார் ஒன்றை கொடுத்துள்ளேன். “ என கூறினார் முத்துகுமார்.

ஆனால் தம்பதியினர் இருவரும் தற்போதும் பயத்தில் உள்ளனர். “ நாங்கள் பெண்ணின் தந்தையிடமிருந்து, எங்களை தொந்தரவு செய்யமாட்டேன் எனவும், அச்சுறுத்தி மிரட்ட மாட்டேன் எனவும் எழுத்துபூர்வமான உறுதியை பெற்று தர வேண்டும். என்றால் தான் நாங்கள் வீட்டுக்கு திரும்ப முடியும். “என கூறினார் கண்ணதாசன். உடுமலை சம்பவத்திற்கு பின், கொல்லப்படுவோமோ என்ற பயத்தில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினர் 

கண்ணதாசனும், அவரது மனைவி சித்ராவும் ஏழு ஆண்டுகளுக்காக காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் 

கடந்த மார்ச் 13 அன்று, உடுமலைபேட்டையில் சங்கர் – கௌசல்யா என்ற இளம் தம்பதியினரை நடுரோட்டில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பல் தாக்கிய சம்பவம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேவர் சமூகத்தை சேர்ந்த கௌசல்யா, சங்கர் என்ற தலித் இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதே அதற்கு காரணம். இந்த தாக்குதலில் சங்கர் அதே இடத்தில் பலியாக, கௌசல்யா படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த தம்பதியினர் தாக்கப்படும் படங்களை பார்த்து, திருச்சியை சேர்ந்த 28வயதான கண்ணதாசன் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார். தனது நிலைமையும் இது போன்று ஆகிவிடுமோ என்ற பயமே இதற்கு காரணம். தலித் சமூகத்தை சேர்ந்த இவர், கொங்கு வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்துள்ளார். கடந்த வருடம் இதே சமூக பெண்ணிடம் நட்புடன் பேசியதற்காகவே கோகுல்ராஜ் என்ற இளைஞர் கொல்லப்பட்டிருந்தார்.

இருப்பினும், கண்ணதாசனின் பயம் ஒரு முன்னெச்சரிக்கையாக மாறியது. தான் காதலித்த 21 வயது சித்ராவிற்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடிவு செய்தார். இதனை தொடர்ந்து மார்ச் 23 அன்று ஏற்கனவே திட்டமிட்டபடி தங்கள் திருமணத்தை நாமக்கலில் பதிவு செய்து கொண்டனர். அதன்பின்னர், இது போன்ற தம்பதியினருக்கு பாதுகாப்பு அளிக்கும் ‘கராத்தே’ முத்துகுமார் என்ற வழக்கறிஞரை தொடர்பு கொண்டனர். தங்கள்  திருமணத்திற்கு பின் தலைமறைவாகியுள்ளனர்.

ஏழு ஆண்டுகளுக்கு முன் கண்ணதாசன், தனது மனைவி சித்திராவை சந்தித்தார்.திருச்சி அருகேயுள்ள உழன்குடியை சேர்ந்தவர் கண்ணதாசன். அவரது மனைவி அதற்கு அருகேயுள்ள மணச்சநல்லூரை சேர்ந்தவர். பெயிண்டர் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது, சித்ராவை பஸ்ஸில் வைத்து தினந்தோறும் சந்திப்பது வழக்கமாக இருந்தது. பஸ் சந்திப்பு, பின்னர் போனில் இருவரும் பேசுமளவுக்கு மாறியது. அதோடு, கண்ணதாசன் தனது காதலையும் சித்திராவிடம் கூறியுள்ளார்.” எனது பைக்கை எடுத்து கொண்டு சித்ராவிடம் என் விருப்பத்தை கூறினேன். முடிவெடுக்க இரண்டு மாத அவகாசம் வேண்டும் என்றார். ஆனால் கடைசியாக தனது சம்மதத்தை கூறினார்.” என்றார்.

கண்ணதாசனுடன் உள்ள காதல் விவகாரத்தை அறிந்த சித்ராவின் பெற்றோர், அவரிடம் இது பற்றி கேட்டனர். அப்போது, தான் கண்ணதாசனை காதலிக்கவில்லை என கூறி தனது பெற்றோரிடம் நிராகரித்து சித்ரா கூறியுள்ளார்.

ஆனால், சித்ரா கண்ணதாசனுடன் ஒளித்து ஓடிய போது தான் கேள்வியே எழும்பியது. ஏற்கனவே அவர், சித்ராவின் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ஓடி செல்ல திட்டமிட்டிருந்தார். அதனை நன்கு திட்டமிட்டு செயல்படுத்தவும் செய்தார். ஆனால், சித்ராவின் குடும்பத்தினர் இருவரும் திருமணம் செய்து கொண்ட அன்று, இந்த சம்பவத்தை அறிந்து கொண்டனர்.

உடனடியாக, இருவரும் அந்த வழக்கறிஞரை தொடர்பு கொண்டு தலைமறைவாகிவிட்டனர்.” நானும் எனது மனைவியும் மிகவும் பயந்து போயுள்ளோம். சித்ராவின் உறவினர்கள் எனது வீட்டிற்கு சென்று, எனது அம்மாவையும், சகோதரனையும் பார்த்து என்னை கொன்று விட போவதாக கூறி மிரட்டி வருகின்றனர். நான் திரும்பி செல்லவில்லையெனில் எனது சகோதரனை சிறைபிடிப்போம் என்று கூறி சென்றுள்ளனர். “ என கண்ணதாசன் கூறினார்.

பெண்ணின் தந்தையும், சித்ரா வீட்டிற்கு திரும்பி வரவேண்டும் இல்லையெனில் கண்ணதாசனை கொன்று விடபோவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.  சித்ராவின் அம்மாவும், தனது மகள் திரும்ப வரவேண்டும், வந்துவிட்டால் அவரை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க போவதாக கூறியதாக  கண்ணதாசன் கூறுகிறார்.

கண்ணதாசனுக்கு தந்தை இல்லை. தனது தாயார் மகாதேவி மற்றும் சகோதரர் ராஜ்குமார் ஆகியோருடன் வாழ்ந்து வந்தார். சகோதரரும் பெயிண்டர் வேலையே செய்து வருகிறார். சித்ரா, மணச்சநல்லூரில் உள்ள இந்திராகாந்தி கல்லூரியில் எம்.காம் படித்து வருகிறார்.

புதுமண தம்பதிகள் விரும்புவதெல்லாம், கண்ணதாசனின் வீட்டிற்கு சென்று, சித்ராவின் உறவினர்களால் தாக்கப்படுவோம் என்ற பயம் இல்லாமல் வாழ வேண்டும் என்பது தான்.

இதற்கிடையே, வழக்கறிஞர் போலீசில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். இதுபற்றி கூறும் போது, “உள்ளூர் போலீசார் பெண்ணின் தந்தைக்கு உதவுவதால், நான் எஸ்பியை நேரில் கண்டு புகார் ஒன்றை கொடுத்துள்ளேன். “ என கூறினார் முத்துகுமார்.

ஆனால் தம்பதியினர் இருவரும் தற்போதும் பயத்தில் உள்ளனர். “ நாங்கள் பெண்ணின் தந்தையிடமிருந்து, எங்களை தொந்தரவு செய்யமாட்டேன் எனவும், அச்சுறுத்தி மிரட்ட மாட்டேன் எனவும் எழுத்துபூர்வமான உறுதியை பெற்று தர வேண்டும். என்றால் தான் நாங்கள் வீட்டுக்கு திரும்ப முடியும். “என கூறினார் கண்ணதாசன்.  - See more at: thenewsminute.com/

கருத்துகள் இல்லை: