திங்கள், 4 ஏப்ரல், 2016

இலங்கையில் போதை பொருள் கடத்தலில் இந்தியர் உள்பட 14 வெளிநாட்டவர் 110 kilograms of heroin worth USD 7.5 கைது

12 hours ago - Indian Among 14 Foreigners Arrested in Drug Bust in Lanka ... 14 foreigners detained by Sri Lankan police in connection with the country's biggest drug bust in nearly three years, after 110 kilograms of heroin worth USD 7.5 ...
இலங்கையில் 3 வருடங்களில் இல்லாத வகையில் கடற்பகுதியில் வைத்து 101 கி.கிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியர் உள்பட 14 பேரை இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் 10 பேர் ஈரான் நாட்டவர்.  2 பேர் பாகிஸ்தானியர்கள்.இந்தியர் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த நபரும் கைது ஆகியுள்ளனர். கடந்த மார்ச் 30ந்தேதி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் இலங்கை கப்பற்படையினர் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் 101 கி.கிராம் எடை கொண்ட ஹெராயின் என்ற போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது இதன் மதிப்பு 49.5 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.  இச்சம்பவத்தில் நெகோம்போ நகரில் 3 பேரை சந்தேக அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர்.


கடத்தல்காரர்கள் பயன்படுத்திய படகு ஒன்றும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.  கடந்த 3 வருடங்களில் இல்லாத வகையில் மிக பெரிய அளவில் கடற்பகுதியில் வைத்து போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  பாகிஸ்தானியர்களும் மற்றும் ஈரானியர்களும் படகில் வைத்து கைது செய்யப்பட்டனர்.  மற்றவர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.  பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் போதை பொருள் டீலர்கள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர் என போலீசார் கூறியுள்ளனர்.  உள்ளூர் ஏஜெண்டுகளையும் போலீசார் தேடி வருகின்றனர்   dailaythanthi.com

கருத்துகள் இல்லை: