ஐதராபாத்: மொரீஷியசை சேர்ந்த வங்கியில் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல்
மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், மத்திய அமைச்சருக்கு எதிராக,
'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டு உள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான
மத்திய அமைச்சரவையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை இணையமைச்சராக
பதவி வகிப்பவர், ஒய்.எஸ்.சவுத்ரி. தெலுங்கு தேசம் கட்சியின் ராஜ்யசபா
எம்.பி.,யான இவர், 'சுஜானா இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனங்களின் இயக்குனராகவும்
உள்ளார். மொரீஷியஸில் இவர் நடத்தும் நிறுவனத்துக்காக, அந்நாட்டு வங்கியில்,
106 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். இந்த கடனை திருப்பிச் செலுத்தாததால்
அவருக்கு எதிராக, மொரீஷியஸ் வங்கி சார்பில், ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு
தொடரப்பட்டது. இவனையும் பக்குவமாக லண்டனுக்கு அனுப்பு வைப்பாங்க
இந்த வழக்கு விசாரணைக்காக, மூன்று முறைக்கு மேல் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து, அவருக்கு எதிராக, 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், அவர் கைதாகும் அபாயம் உள்ளது.
வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்று விட்டதாக, 'கிங்பிஷர்' அதிபர் விஜய் மல்லையா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 'வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்பவர்களை தப்ப விடமாட்டோம்' என, மத்திய அரசு உறுதியளித்துள்ள நிலையில், மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவருக்கு, வங்கிக் கடன் மோசடி வழக்கில், 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
'நீதித்துறையைமதிக்கிறேன்'
ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நெருக்கமான இவர், தனக்கு எதிரான, 'பிடிவாரன்ட்' குறித்து கூறுகையில், ''நீதித்துறை மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். வேண்டுமென்றே விசாரணைக்கு ஆஜராகவில்லை என கூறும் குற்றச்சாட்டு, முற்றிலும் தவறானது,'' என்றார். தினமலர்.காம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக