செவ்வாய், 5 ஏப்ரல், 2016

பாரத் மாதா கி ஜெய் சொல்லாதவர்களின் தலையை வெட்டுவோம்: யோகா குரு ராம்தேவ்

இந்தியாவில் சட்டம் என்று ஒன்று மட்டும் இல்லை என்றால் ''பாரத் மாதா கி ஜே' என சொல்ல மறுப்பவர்களின் தலையை வெட்டுவோம் என்று யோகாகுரு ராம்தேவ் பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது. பாரத் மாதா கி ஜெய் முழக்கத்தை இந்தியர்கள் அனைவரும் எழுப்ப வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தி இருந்தார். இதற்கு இந்துத்துவா அமைப்புகள் ஆதரவு தெரிவிக்க இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. yoga guru Baba Ramdev's controversially 'hate speech' இந்நிலையில் ஹரியாணா மாநிலம் ரோட்டக்கில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ராம்தேவ், இந்த நாட்டில் சட்டம் என்ற ஒன்று இல்லை என்றால் 'பாரத் மாதா கி ஜெய்' என்று சொல்ல மறுப்பவர்களின் தலையை வெட்டுவோம் என்று குறிப்பிட்டார்.  
பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷத்தினை எந்த மதமாவது தடை செய்தால், அது தேச நலனுக்கு எதிரானது என்றுதான் அர்த்தம் என்றும் கூறி உள்ளார். இதையடுத்து ராம்தேவுக்கு எதிராக முன்னாள் உள்துறை அமைச்சர் சுபாண் பத்தா தலைமையில் சிவில் சமூக உறுப்பினர்கள் இன்று போலீசில் புகார் அளித்துள்ளனர். முன்னதாக கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் ‘பாரத் மாதா கி ஜெய்' கோஷம் எழுப்ப மாட்டேன் என மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி கூறியிருந்தார். இதுபோன்று பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், ராம்தேவின் இந்த கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Read more at: //tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: