வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில்
மீண்டும் போட்டியிடுகிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது முதல்,
அவரை எதிர்க்கக்கூடிய வலிமையான வேட்பாளர் யார் என்பது குறித்து
சமூகவலைத்தளங்களில் விவாதம் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையை வெள்ளம் நாசக்காடாக்கியபோது
சொதப்பியவர் ஜெயலலிதா; ஆனால், சென்னையின் உயர்வுக்காக உழைத்தவர் என கட்சி
பேதங்களுக்கு அப்பாற்பட்டு பாராட்டப்படுபவர் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள்
மேயர் மா.சுப்பிரமணியம். வெள்ள சேதத்தின்போது அ.தி.மு.க. அரசு காட்டிய
மெத்தனம் மொத்தமும் மா.சுப்பிரமணியத்துக்கு அத்துபடி. இந்த அடிப்படையில்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து மா.சுப்பிரமணியத்தை தி.மு.க.
களமிறக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஒருவர் கொளுத்திப் போட்டுள்ளார்.
சென்னை வெள்ளப் பிரச்சனையை ஒரு தேர்தல்
பிரச்சனையாக்கி விவாதிக்க இதுதான் சரியான வழி என்று நம்பும் பலரும் இந்த
யோசனையை வழிமொழிந்து பதிவிட்டு வருகிறார்கள்.
தி.மு.க. தலைமை இது குறித்து பரிசீலித்து, ஆர்.கே.நகரில் மா.சுப்பிரமணியத்தை நிறுத்தி, ஜெயலலிதாவை தெறிக்க விடலாமே…!
1 கருத்து:
super competations
கருத்துரையிடுக