நடிகர் சங்கத்தில் எலியும் பூனையுமாக மோதிக் கொண்டிருந்த சரத்குமார்
மற்றும் கருணாஸை தேர்தல் களத்தில் ஒன்றாக்கிவைத்திருக்கிறார் முதல்வர்
ஜெயலலிதா.
நடிகர் சங்க வரலாறு காணாத தேர்தல் என்றால், அது 2015-ல் நடந்த தேர்தல்தான். வழக்கமாக இது போன்ற தேர்தல்களில் ஃபீல்ட் அவுட் ஆன நடிகர்கள்தான் மும்முரம் காட்டுவார்கள். ஆனால் இந்த முறை முன்னணி நடிகர்கள் பலரும் களமிறங்கினர்.
குறிப்பாக
விஷால்தான் பெரிய அளவில் வரிந்து கட்டிக் கொண்டு, தலைவராக இருந்த
சரத்குமார், செயலர் ராதாரவிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். அவருக்கு
ஆதரவாக கருணாஸ் வந்தார்.
சட்டமன்றத் தேர்தலே தோற்றுப் போகும் அளவுக்கு பிரச்சாரங்களும், அவதூறுப் பேச்சுகளும் என அனல் பறந்தது.
கடைசியில் சரத்குமார் அணி படு மோசமாகத் தோற்றது. கருணாஸ் இருந்த விஷால் அணி வென்றது. வென்று வந்த பிறகு, சரத்குமார் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் சொல்லி வந்த கருணாஸ், கமிஷனர் அலுவலகத்தில் நிதிமோசடிப் புகாரும் கொடுத்துள்ளார்.
இந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தோற்க முக்கிய காரணமே, முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு அவருக்கு இல்லாமல் போனதுதான் என்றும் சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்திய மனோரமா மரண நிகழ்வில், தன்னைப் பார்க்க வந்த சரத்குமாரை கண்டு கொள்ளாமல் ஜெயலலிதா சென்றது.
இந்த சூழலில்தான் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியிலேயே மீண்டும் இடம் பிடித்தார் சரத்குமார். கருணாஸும் தனது புலிப்படை ஆதரவை அதிமுகவுக்குத் தெரிவித்துவிட்டு வந்தார்.
அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானபோது சரத்குமாருக்கு அதிர்ச்சி. இரண்டு தொகுதிகளாவது கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால் ஒன்றுதான் கிடைத்தது. அதைவிட பேரதிர்ச்சி... சந்தித்துவிட்டு வந்த 24 மணி நேரத்தில் கருணாஸுக்கும் ஒரு சீட்டை ஜெயலலிதா ஒதுக்கியது.
நடிகர் சங்கத்தில் மோதிக் கொண்டிருந்த இரு அணிகளுக்கும் தலா ஒரு சீட்டை ஒதுக்கி சைலன்ட் ஆக்கிவிட்டார் ஜெயலலிதா.
எந்த வாய் சரத்குமாரை தாறுமாறாகத் திட்டியதோ, அதே கருணாஸ் வாய் இப்போது அவருக்காக வாக்கு சேகரிக்கப் போகிறது. அதேபோல, மிகக் கேவலமாக தன்னால் விமர்சிக்கப்பட்ட கருணாஸுக்காக ஓட்டுக் கேட்கப் போகிறார் சரத்குமார்! /tamil.filmibeat.com/
நடிகர் சங்க வரலாறு காணாத தேர்தல் என்றால், அது 2015-ல் நடந்த தேர்தல்தான். வழக்கமாக இது போன்ற தேர்தல்களில் ஃபீல்ட் அவுட் ஆன நடிகர்கள்தான் மும்முரம் காட்டுவார்கள். ஆனால் இந்த முறை முன்னணி நடிகர்கள் பலரும் களமிறங்கினர்.
சட்டமன்றத் தேர்தலே தோற்றுப் போகும் அளவுக்கு பிரச்சாரங்களும், அவதூறுப் பேச்சுகளும் என அனல் பறந்தது.
கடைசியில் சரத்குமார் அணி படு மோசமாகத் தோற்றது. கருணாஸ் இருந்த விஷால் அணி வென்றது. வென்று வந்த பிறகு, சரத்குமார் மீது மோசடிக் குற்றச்சாட்டுகள் சொல்லி வந்த கருணாஸ், கமிஷனர் அலுவலகத்தில் நிதிமோசடிப் புகாரும் கொடுத்துள்ளார்.
இந்த நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் தோற்க முக்கிய காரணமே, முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவு அவருக்கு இல்லாமல் போனதுதான் என்றும் சொல்லப்பட்டது. அதை உறுதிப்படுத்திய மனோரமா மரண நிகழ்வில், தன்னைப் பார்க்க வந்த சரத்குமாரை கண்டு கொள்ளாமல் ஜெயலலிதா சென்றது.
இந்த சூழலில்தான் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அணியிலேயே மீண்டும் இடம் பிடித்தார் சரத்குமார். கருணாஸும் தனது புலிப்படை ஆதரவை அதிமுகவுக்குத் தெரிவித்துவிட்டு வந்தார்.
அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானபோது சரத்குமாருக்கு அதிர்ச்சி. இரண்டு தொகுதிகளாவது கிடைக்கும் என்று காத்திருந்தார். ஆனால் ஒன்றுதான் கிடைத்தது. அதைவிட பேரதிர்ச்சி... சந்தித்துவிட்டு வந்த 24 மணி நேரத்தில் கருணாஸுக்கும் ஒரு சீட்டை ஜெயலலிதா ஒதுக்கியது.
நடிகர் சங்கத்தில் மோதிக் கொண்டிருந்த இரு அணிகளுக்கும் தலா ஒரு சீட்டை ஒதுக்கி சைலன்ட் ஆக்கிவிட்டார் ஜெயலலிதா.
எந்த வாய் சரத்குமாரை தாறுமாறாகத் திட்டியதோ, அதே கருணாஸ் வாய் இப்போது அவருக்காக வாக்கு சேகரிக்கப் போகிறது. அதேபோல, மிகக் கேவலமாக தன்னால் விமர்சிக்கப்பட்ட கருணாஸுக்காக ஓட்டுக் கேட்கப் போகிறார் சரத்குமார்! /tamil.filmibeat.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக