தேமுதிகவில்
இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் தலைமையிலான அணியினர் இன்று சென்னையில்
செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு
சந்திரகுமார் பதில் அளித்தார்.....கேள்வி:
காஞ்சிபுரம் மாநாட்டுக்குப் பிறகு நீங்கள் ஒரு வீடியோ வெளியிட்டீர்கள்.
அதில் எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி பேசவில்லை என்று கூறினீர்கள். திடீரென
எப்படி கூட்டணி வந்தது.
பதில்:
அப்போது திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாக பரவலாக பேசப்பட்டது.
அதற்காக கேப்டன் ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றார். அதை என்னை சொல்ல சொன்னார் சொன்னேன். தேமுதிக எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சொல்ல சொன்னார்.
அதற்காக கேப்டன் ஒரு விளக்கம் கொடுக்க வேண்டும் என்றார். அதை என்னை சொல்ல சொன்னார் சொன்னேன். தேமுதிக எந்த ஒரு கட்சியுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சொல்ல சொன்னார்.
கேள்வி: நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் பணம் வாங்கப்பட்டதா?
பதில்:
9 நாட்கள் நேர்காணல் நடந்தது. அதில் கலந்து கொண்டவர்களிடம் கருத்து
கேட்கப்பட்டது. அதில் யாரிடமும் பணம் வாங்கவில்லை. அதற்கு பிறகு ஒவ்வொரு
தொகுதியிலும் ஒன்று, இரண்டு, மூன்று பேர் வரை தேர்வு செய்யப்பட்டு, அவர்களை
குறிப்பிட்ட தொகையை சொல்லி கட்ட சொன்னார்கள். ஒரு சிலர் கட்டினார்கள். ஒரு
சிலர் கட்டவில்லை. இப்போது திரும்ப வேணும் என கேட்கிறவர்களுக்கு
கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் எந்த பிரச்சனையும் இல்லை.
கேள்வி: திமுகவோடு கூட்டணி வைப்பதாக பேச்சுவார்த்தை நடந்ததா இல்லையா
பதில்:
தனிப்பட்ட முறையில் அவரது நண்பர்கள், உறவினர்கள் வைத்து கூட்டணி குறித்து
பேசுவதாக சொன்னவர் அவர். எங்களிடம் மட்டுமல்ல நேர்காணலுக்கு வந்த 3,900
பேரிடமும் அவர் சொன்னார். நான் திமுகவிடம் பேசினேன். இவ்வளவுதான் சீட்
தரமுடியும் என்கிறார்கள். இதற்கு மேல் தரமுடியாது என்கிறார்கள்.
உள்ளாட்சியில் 25 சதவிகிதம் தருவதாக கூறினார்கள். நான் 117 சீட் கேட்டேன்.
உள்ளாட்சியில் 50 சதவிகிதம் கேட்டேன் என நேர்காணல் வந்த அத்தனை பேரிடமும்
சொன்னார். உண்மையா இல்லையா என்று நேர்காணலில் கலந்துகொண்டர்வர்களிடம்
கேளுங்கள்.
கேள்வி: திமுக மீது விமர்சனம் வைத்தீர்கள். குற்றச்சாட்டு வைத்தீர்கள். இப்போது கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.
பதில்: மக்கள் இன்று விரும்புவது ஆட்சி மாற்றம்.
கேள்வி: பொதுக்கூட்டத்தில் திமுகவைப் பற்றி குற்றம் சாட்டி பேசினீர்கள். இப்போது கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்.
பதில்:
திமுகவைப் பற்றி பேசவில்லை. பொதுக்கூட்டம் நடந்த இடத்தில் இருந்த
பத்திரிகையாளர்களிடம் கேட்டுப்பாருங்கள். அவர்களே நீங்கள் ஏன் திமுகவைப்
பற்றி பேசவில்லை என்றார்கள். ஏன்.. நக்கீரன்ல வந்திருக்கு எடுத்து பாருங்க
சார். அதில் போட்டிருக்காங்க.. வைகோ என்னை பிரஷர் பண்றார் திமுகவை அட்டாக்
பண்ண சொல்லி. நான் சொன்னேன். என் கட்சி பாதிக்கப்பட்டது அதிமுகவால், நான்
பாதிக்கப்பட்டது அதிமுகவால். தயவு செய்து என்னை நீங்கள் பிரஷர் பண்ணாதீங்க.
அதிமுகவைத்தான் நான் அட்டாக் பண்ணி பேசுவேன் என்றேன்.
படம்: அசோக் நக்கீரன்,இன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக