புதன், 6 ஏப்ரல், 2016

பாஜகவிடம் பிரேமலதா கேட்டது : சுதீசுக்கு ராஜ்யசபா...பிரேமலதாவுக்கு தேசிய மகளிர் ஆணையதலைவி(காபினெட் அந்தஸ்து) பெரும் தொகை பணம்....


சென்னை: பாஜக கூட்டணியில் சேருவதே விஜயகாந்த்தின் முதல்திட்டமாக இருந்தது. பிரேமலதாவும் அதைத்தான் விரும்பினார். ஆனால் திடீரென பிரேமலதா, வைகோவைச் சந்தித்துப் பேசி கூட்டணியை மாற்றி விட்டார் என்று கூறியுள்ளார் வி.சி.சந்திரகுமார். அதற்குக் காரணம், பிரேமலதா கேட்ட சில கோரிக்கைகளை பாஜக நிராகரித்ததே என்று சந்திரகுமார் கூறியுள்ளார். Vijayakanth wanted alliance with BJP : VC Chandrakumar சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் தேமுதிகவின் கூட்டணி தொடர்பான பல ரகசியங்களை அம்பலப்படுத்தினார் சந்திரகுமார். அதில் ஒன்று பாஜகவுடன் விஜயகாந்த் கூட்டணி வைக்க விரும்பியுத. இதுகுறித்து சந்திரகுமார் கூறுகையில், பாஜக கூட்டணிக்குப் போவது தான் விஜய்காந்த்தின் திட்டமாக இருந்தது. பிரேமலதாவும கூட அதை விரும்பினார். பாஜகவுடன் கூட்டணி அமைவதையே அவரும் விரும்பினார். இதைதான்  நாம நெடு நாளாக  சொல்லி வருகிறோம் ...சுப்பிரமணியம் சாமியின் சொல் கேட்டுதான் விஜயகாந்தும  பிரேமலதாவும்  அரசியல் பண்றாங்க  இந்த கோரிக்கைகள் கூட சாமியின் அஜெண்டாதான்...இப்போது இவங்களை   ஜெயலலிதா காசு கொடுத்து வாங்கிவிட்டார்
ஆனால் தேமுதிக விதித்த சில கோரிக்கைகளை பாஜக ஏற்கவில்லை. இதனால் கூட்டணி அமையவில்லை. அதேசமயம், வைகோவை நேரில் சந்தித்து மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக கூட்டணியை ஏற்படுத்தியவர் பிரேமலதாதான் என்றார் சந்திரகுமார். Vijayakanth wanted alliance with BJP : VC Chandrakumar பிரேமலதாவின் கோரிக்கைகள தொடர்பாக முன்பே சில தகவல்கள் வெளியாகின. அதாவது தனது தம்பிக்கு எம்.பி. பதவி, தனக்கு மத்திய அமைச்சர் அந்தஸ்திலான பதவி (தேசிய மகளிர் ஆணையத் தலைவர் பதவியை பிரேமலதா கேட்டதாக தகவல்கள் வெளியாகியது நினைவிருக்கலாம்), தேர்தல் செலவுக்கு மிகப் பெரிய தொகை ஆகியவற்றை பிரேமலதா கேட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

Read more at: ://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: