ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

முதல்வர் ஜெயலலிதா 234 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என தொண்டர்களுக்கு கடிதம்


காமராஜர் உயரத்தை எட்டுவாரா ஜெ., 'தமிழகத்தின், 234 தொகுதிகளிலும் நாமே வெற்றி பெற வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா, தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். எந்த தலைவரும் பாதி தொகுதிகளில் ஜெயித்தால் போதும் என, அறிவுறுத்தப் போவதில்லை. அன்புணியும், சீமானுமே அப்படித்தான் அறிவுறுத்துவார்கள். இருப்பினும், இந்த முறை, அ.தி.மு.க., தனித்து போட்டியிடுவதில் ஒரு முக்கியமான மைல்கல் விஷயத்தை கவனிக்க வேண்டியிருக்கிறது.
சட்டசபை தேர்தலில் இதுவரை, தமிழகத்தில், தனித்து போட்டியிட்டு, வெற்றி பெற்ற ஒரே கட்சி, காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் மட்டும் தான். அ.தி.மு.க.,வும் கிட்டத்தட்ட அதே நிலையில், இன்று இருப்பதாக ஜெயலலிதா எண்ணுகிறார் என்றே தோன்றுகிறது.அதனால் தான், முக்கிய கூட்டணி கட்சிகளை கழற்றிவிட்டு, அனைத்து தொகுதிகளிலும் தன் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த முடிவெடுத்து உள்ளார்.   இவனுக அழுது அழுதே சாவப் போராய்ங்க
தன்னை ஆதரிக்கும் உதிரி கட்சிகளையும், இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடும்படி பணிக்கப் போகிறார் என்ற செய்திகள் வெளியாகி உள்ளன.

இது பற்றி, அ.தி.மு.க., வட்டாரங்கள், 'கடந்த லோக்சபா தேர்தலில், தனித்தே போட்டியிட்டு, 37 இடங்களில் வெற்றி பெற்றோம். அந்த தெம்பு, தற்போது, கூடுதலாகி விட்டது. அதற்கேற்றார் போல, தற்போது, தமிழகத்தில்ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. அதனால், அ.தி.மு.க.,வுக்கு எதிரான ஓட்டுகள் சிதறி, சாதகமான சூழல் ஏற்படும்' என்கின்றனர்.

சாதனை: கடந்த, 1957ல் நடந்த சட்டசபை தேர்தலில் முதல்வர் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. 206 தொகுதிகளில், 151 இடங்களைப் பிடித்த காங்கிரஸ், 45 சதவீத ஓட்டுகளையும் பெற்றிருந்தது.அடுத்து, 1962ல் நடந்த தேர்தலிலும் முதல்வர் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, 136 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை, 46 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தது.அதன்பின், நடந்த எல்லா சட்டசபை தேர்தல்களிலும் ஏதாவது ஒன்று அல்லது பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டுத்தான், அ.தி.மு.க.,வும் தி.மு.க.,வும் மாறி மாறி வெற்றிபெற்று வந்துள்ளன.

ஆசை;

பல காரணங்களுக்காக, தமிழக தலைவர்களில், அனைவரையும் விட மிக உயர்ந்தவராக காமராஜர் கருதப்படுகிறார். ஆனால், ஜெ.,க்கு காமராஜர் என்றாலே பிடித்ததில்லை என்பதை, அவருடைய நடவடிக்கைகள் வெளிக்கொண்ர்ந்து உள்ளன.
 உதாரணத்திற்கு காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை, எம்.ஜி.ஆர்., கொண்டு வந்த திட்டம் என, சட்டசபையில் தெரிவித்தார் காமராஜர் பெயர் சூட்டப்பட்டுள்ள சென்னை உள்நாட்டு விமான நிலையத்தின் பெயரை மாற்றி, அதற்கு, எம்.ஜி.ஆர்., பெயரை சூட்ட கேட்டுக் கொண்டார்.ஜெ., தனது அரசியல் வாழ்கையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியும், தமிழகத்தில் வேறு எந்த கட்சியும், நபரும், ஏன் எம்.ஜி.ஆரே செய்யாத சாதனையாக, தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் சாதனை, அவர் அடையாத ஒன்றாக இருக்கிறது.லோக்சபா தேர்தலில் 44 சதவீத ஓட்டுகளை பெற்ற பின்னும், அந்த சாதனைக்கு முயற்சிக்காமல் இருக்க எந்த தலைவராலும் முடியாது. அதை தான் ஜெ.,யும் செய்கிறார். அதனால் தான், த.மா.கா.,வின் கதியும் ஊசலாடுகிறது.
- நமது நிருபர்  தினமலர்.com  

கருத்துகள் இல்லை: