சனி, 9 ஏப்ரல், 2016

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமாகாவுக்கு 30 தொகுதிகள்- இன்று அறிவிப்பு?

சென்னை: தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 30 தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தற்போதைய அந்த கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருகிற சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் அளவுக்கு த.மா.கா.வுக்கு பலம் இல்லை. மக்கள் விரும்பும் கூட்டணியில் தான் த.மா.கா இடம் பெறும் என்று ஜி.கே.வாசன் தொடர்ந்து கூறிவந்தார். பின்னர் அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தமாகா ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.


திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளை காட்டிலும் கணிசமான தொகுதிகளை அதிமுகவிடம் இருந்து பெற்று போட்டியிடலாம் என தமாகா கணக்கு போட்டது. ஆனால் 15 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க அதிமுக முன்வந்தது.

அதுவும் இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிட வேண்டும் இல்லாவிட்டால் இடமில்லை எனவும் கூறியதால் அதிமுக கூட்டணியில் வாசன் சேருவதில் சிக்கல் நீடித்தது. இன்னொருபுறம் பாஜகவும் தமாகாவுக்கு வலை விரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் இடம் பெறவுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி தலைவர்களை தமாகா நிர்வாகிகள் இன்று சந்தித்து பேச உள்ளதாகவும், 30 தொகுதிகள் வரை வாசன் கட்சிக்கு ஒதுக்க வாய்ப்பு இருப்பதாகவும் அந்த கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைவது குறித்து இன்றோ அல்லது நாளையோ உறுதியான தகவல் தெரியவரும் என திருமாவளவன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க  //tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: