சென்னை: அதிமுகவின் கூட்டணியில் இருப்பதாக கூறிக்கொண்டிருந்த தமிழக
வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட சில சிறு கட்சிகளுக்கு அதிமுக கூட்டணியில்
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.
234 தொகுதிகளுக்கும், அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை
இன்று வெளியிட்டார், கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான
ஜெயலலிதா. அதிமுக 227 தொகுதிகளிலும், கூட்டணியிலுள்ள கட்சிகள் 7
தொகுதிகளிலும் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Jayalalitha avoid to share seats with some alliance partners
சமீபத்தில் உருவாக்கப்பட்ட நடிகர் கருணாசின் கட்சி, தமீம் அன்சாரி
கட்சியினருக்கெல்லாம் தொகுதிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தமிழக
வாழ்வுரிமை கட்சிக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
அக்கட்சி தலைவர் வேல்முருகன், திமுகவோடும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி
வந்ததாக வெளியான தகவல்தான், இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதுதவிர,
டாக்டர் சேதுராமனின், மூவேந்தர் முன்னணி கழகம், ஜான் பாண்டியனின் தமிழக
முன்னேற்ற கழகம், ஸ்ரீதர் வாண்டையாரின், மூவேந்தர் முன்னேற்ற கழகம்,
பி.வி.கதிரவனின் அகில இந்திய பார்வேர்ட் பிளாக் கட்சி ஆகியவற்றுக்கும்
போட்டியிட வாய்ப்பு தரப்படவில்லை.
இதில் "தமிழக வாழ்வுரிமை கட்சியை தவிர்த்த பிற கட்சிகள் முக்குலத்தோர் ஜாதி
பின்புலம் கொண்டவை., தனக்கு ஏற்கனவே போதும், போதும் என்கிற அளவுக்கு
முக்குலத்தோர் ஜாதி ஆதரவு இருப்பதால், இக்கட்சிகளுக்கு சீட் தேவையில்லை என
ஜெயலலிதா நினைத்திருக்கலாம்" என்கிறார் அதிமுக நிர்வாகி ஒருவர்
Read more at://tamil.oneindia.com/
Read more at://tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக