பீஜிங் : சீனாவில் உள்ள நடுநிலை பள்ளிகளில் காண்டம் விற்க சுகாதார துறை
அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு
தெரிவித்துள்ளனர்.சீனாவின் சாங்ஷி மாகாண சுகாதார துறை இயக்குனர் மா
குவாங்கை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:சீனாவில் மாணவர்கள்
மற்றும் வாலிபர்கள் மத்தியில் எய்ட்ஸ் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து
வருகின்றன. இதை தடுக்க சில மாதங்களாக அரசு தீவிர ஆய்வு நடத்தியது. இதில்
கடந்த 2008ம் ஆண்டு 15 முதல் 24 வயது வரையிலான வாலிபர்களிடம் 482 பேருக்கு
மட்டுமே எய்ட்ஸ் இருப்பது தெரிந்தது. ஆனால் 2012ல் இது 1,387 ஆக
அதிகரித்துள்ளது. இது மிகவும் கவலை அளிக்கிறது.
இதையடுத்து தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையத்துடன் இணைந்து நடத்திய ஆய்வில் மிக கவனமாக நடுநிலை பள்ளிகளில் மாணவர்கள் பலர் செக்ஸ் உறவு வைத்து கொள்வது தெரிய வந்துள்ளது. அதனால் பாதுகாப்பான உறவு, எய்ட்ஸ் நோய் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு காண்டம் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. நடுநிலை பள்ளிகளில் காண் டம் விற்க குடும்ப கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதார துறை இயக்குனர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசின் முடிவு, மாணவர்கள் மனதை சீரழித்து அவர்களை தவறான பாதைக்கு கொண்டு சென்று விடும். அதிகாரிகளின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்கு உரியது. மேலும் இளம் வயதிலேயே திருமணத்துக்கு முன்பு பாலியல் உறவை அதிகரிக்க செய்யும்Õ என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் சீனாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. dinakara.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக