லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்தாலும், தமிழக அமைச்சர்களுக்கு
என்னவோ, தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் தான், நிம்மதி கிடைக்கும் என, தெரிகிறது. தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க.,வுக்கு பாதகமாக அமைந்தால், சில அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்களின் பதவி பறிபோகும் என்ற, அச்சமே இதற்கு காரணம்.கட்சியின் பொதுச்செயலரான, ஜெயலலிதா, இப்படி பதவி பறிப்பு மிரட்டலை, மறைமுகமாக விடுத்துள்ளதால், அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் என, சிலருக்கு, ரத்தக் கொதிப்பு அதிகரித்துள்ளதாகவும், அதனால் தான் அடுத்தடுத்து, மருத்துவமனையில் சேர்ந்து, முழு உடல் பரிசோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது
அம்மாவுக்கும் கோவிந்தா அடிமைகளுக்கும் கோவிந்தா அம்மா வும் இந்த கும்பிடு சாமிகளும் தமிழக வளர்ச்சியை , விவசாயத்தை , தொழில் வளர்ச்சியையே ஏன் மொத்த தமிழகத்தையும் ICU யூனிட்டில் படுக்க போட்டு விட்டார்கள் ...எவ்வளவு சீக்கிரமாக அதிமுக ஆட்சிக்கு சங்கு ஊதுரமோ அப்பத்தான் தமிழகம் பிழைக்க வழி ...
நால்வர் அணி லோக்சபா தேர்தல் சமீபத்தில் நடந்தாலும், அதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னதாகவே, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் அடங்கிய நால்வர் அணி உருவாக்கப்பட்டது.இந்த அணியினர் மாவட்ட வாரியாகவும், லோக்சபா தொகுதி வாரியாகவும், ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும், அதற்கேற்ற வகையில், கட்சி பணியாற்ற வேண்டும் என, நிர்வாகிகளையும், தொண்டர்களையும் உற்சாகப்படுத்தினர். மேலும், இந்த, 40க்கு 40, லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காக, அ.தி.மு.க., பொதுச்செயலரும், முதல்வருமான ஜெயலலிதா, முன்னதாகவே, வேட்பாளர்களை அறிவித்து, மற்ற கட்சிகளுக்கு முன், தேர்தல் பிரசாரத்திலும் இறங்கினார்.
ஆனால், கடந்த, 24ம் தேதி நடந்த, லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்குப் பின், அ.தி.மு.க., தரப்பில் எடுக்கப்பட்ட சர்வேயில், சில பாதகமான தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிகிறது. அதனால், கட்சி மேலிடம், கடும் கோபத்தில் உள்ளது. இந்த கோபம், தேர்தல் முடிவுகள் வெளியானதும், தங்கள் மீது பாயலாம் என்பதால், அமைச்சர்களில், 12க்கும் மேற்பட்டோர், தற்போது அரண்டு போய் உள்ளனர். ஆட்சிப் பணி மற்றும் கட்சிப் பணியை கோடநாட்டில் இருந்தபடி மேற்கொள்ள, சென்னையிலிருந்து ஊட்டிக்கு முதல்வர் ஜெயலலிதா சென்ற போது, அவரை வழி அனுப்பி வைக்க, சென்னை விமான நிலையத்திற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்டச் செயலர்கள் திரண்டு வந்தனர்.அப்போது, அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடும், 'டோஸ்' விடுத்ததாகவும், இதுவே, அமைச்சர்கள் சிலர் அரண்டு போனதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. ஜெயலலிதாவை வழி அனுப்பி வைத்து விட்டு, வீடு திரும்பிய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலர்கள், சிலரின் முகங்களில் சோக ரேகைகள் தொடர்கின்றன.
இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
ஓட்டுப்பதிவுக்கு பின் எடுக்கப்பட்ட சர்வேயில், தான் பொறுப்பாளராக இருந்த தொகுதியில், ஆளும் கட்சிக்கு பாதகமான முடிவு வரலாம் என, தெரிந்ததால், தென் மாவட்டத்தை சேர்ந்த மூத்த அமைச்சர் ஒருவருக்கு, குளிர் ஜூரம் வந்து விட்டது. சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்ந்து, சிகிச்சை பெற்றதோடு, முழு உடல் பரிசோதனையும் செய்து கொண்டுள்ளார்.அதேபோல், தென் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு அமைச்சரும், தன் சொந்த தொகுதியில் ஓட்டு சதவீதம் படுமோசமாகவும், அத்தொகுதியில், பா.ஜ., வேட்பாளருக்கு, ஓட்டுப்பதிவு அதிகரித்துள்ளது என்ற தகவல் தெரிந்ததும், தன் பதவிக்கு ஆபத்து வந்து விட்டது என்ற பயத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒரு அமைச்சருக்கு, தேர்தல் செலவுக்கு பணம் வாங்கிய கட்சியினர், அதை செலவு செய்யாமல், 'லபக்' செய்த விவகாரம் தெரிய வந்ததும், அவருக்கு, 'ஹார்ட் அட்டாக்'கே வந்தது போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.இதேபோல், வடமாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் இருவருக்கும், அவர்கள் பொறுப்பாளராக பணியாற்றிய தொகுதிகளில், அ.தி.மு.க.,வுக்கு செல்வாக்கு சரியலாம் என, தகவல் கிடைத்துள்ளதால், அவர்கள் பீதி அடைந்துள்ளனர். அதில், ஒருவருக்கு ரத்தக்கொதிப்பு அதிகமாகி, மருத்துவமனையில் 'அட்மிட்' ஆகியுள்ளார்.தேர்தல் முடிவுகள் பாதகமாக வருமானால், தங்கள் பதவிகள் பணாலாகி விடும் என்ற அச்சத்தில், அமைச்சர்களும், மாவட்ட செயலர்களும், எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர். இதனால், அவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில், முழு உடல் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை மாநகர தொகுதிகளில், கட்சியினரிடம் தேர்தல் செலவுக்காக வழங்கப்பட்ட பணத்தில், 40 சதவீதம் வரை, செலவு செய்யவில்லை என்ற புகார்கள் கட்சி மேலிடத்திற்கு சென்றதால், பணத்தை பதுக்கிய கட்சி பிரமுகர்கள் சிலர், அதை திரும்ப எடுத்து சென்று, ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகளிடம் ஒப்படைத்து வருகின்றனர்.
தங்கள் பதவிகளை காப்பாற்றவும், கட்சி தலைமையின் விசாரணை நடவடிக்கையிலிருந்து தப்பிக்கவும், இவ்வாறு செய்துள்ளனர். சைதாப்பேட்டை சட்டசபை தொகுதி வாக்காளர்கள் பலருக்கு, தேர்தல் முடிந்த பின் கூட, பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.தேர்தலின் போது, கட்சி கொடுத்த பணத்தை சுருட்டியவர்கள், தேர்தல் பணியை ஒழுங்காக பார்க்காமல் ஒதுங்கியவர்கள், மாற்றுக் கட்சிக்கு சாதகமாக செயல்பட்டவர்கள் என, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், அ.தி.மு.க., மேலிடத்திற்கு புகார்கள் குவிந்து வருவதால், அந்த புகார்களை விசாரித்து, கோடநாட்டில் இருந்தபடியே, முதல்வர், ஜெயலலிதா சாட்டையை சுழற்றுவார் என, நம்புகிறோம்.எது எப்படியாயினும், ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், கட்சியிலும் ஆட்சியிலும், அதிரடி ஆட்டங்கள் தொடரும்.இவ்வாறு, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -dinamalar.com

செல்வாக்கு சரியலாம்

குவியும் புகார்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக