பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் நதிகளை இணைப்போம் என
நரேந்திரமோடி அறிவித்தார்.
தெலுங்கானா விவகாரம்
பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி என்ற இடத்தில் நேற்று பிரசாரம் செய்தார். ராஜம்பேட்டை தொகுதியில் பா. ஜனதா சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய மந்திரி புரந்தேசுவரியை ஆதரித்து நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை சரமாரியாக தாக்கினார். அவர் கூறியதாவது:–
டெல்லியில் தாய், மகனை கொண்டு அமைந்துள்ள காங்கிரஸ் அரசு வாய்ப்பு வந்தபோது, தெலுங்கு மக்களை அவமதித்துவிட்டது. அவர்கள் ஆந்திராவை பிரித்து சீமாந்திராவையும், தெலுங்கானாவையும் உருவாக்கி விட்டார்கள். ஆனால் இரு தரப்பு மக்களிடையேயும் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.
ஊழல் நாடு
தெலுங்கானா மாநிலம் ஜூன் 2–ந்தேதி உருவாகும் என தாய், மகன் (சோனியா–ராகுல்) அரசு நாள் குறித்து விட்டது. இந்த நாள்தான் இத்தாலியும் உருவான நாள்.
தாய், மகன் அரசில் இந்தியா ‘ஊழல் இந்தியா’ ஆகி விட்டது. இந்தியா இப்போது ஒரு திட்ட நாடாக உருவாக வேண்டும். அதில் செயல்படுத்துவதற்கான நலத்திட்டங்கள், வளர்ச்சித்திட்டங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
நதிகளை இணைப்போம்
சீமாந்திரா மக்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று ஊழல் ஆந்திரா. இன்னொன்று தங்கமான ஆந்திரா. இவ்விரண்டில்தான் உங்கள் தேர்வு அமைய வேண்டும். நானும் தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் வளர்ச்சிக்காக இங்கே ஒன்றுபட்டு நிற்கிறோம். நாடு முழுவதும் 100 சீரான நகரங்களை தேர்ந்தெடுக்க உள்ளோம். அதில் சீமாந்திராவுக்கு உரிய பங்கு உண்டு.
மத்தியில் பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாட்டில் உள்ள நதிகளை இணைப்போம். அது ராயலசீமாவுக்கு பலன் தரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் பேசிய தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்தது காங்கிரசின் சதி என சாடினார்..dailythanthi.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக