வெள்ளி, 2 மே, 2014

வாசிக்கும் ஆர்வம் அடுத்த தலைமுறைக்கும் செல்கிறது ! சென்னைப் புத்தகச் சங்கமம்


சென்னைப் புத்தகச் சங்கமத்தின் மூலம்
வாசிக்கும் ஆர்வம் அடுத்த தலைமுறைக்கும் செல்கிறது
பரிதா நாயக் என்.பி.டி இணை இயக்குனர்

சென்னை ஏப். 30-  சென்னை புத்தகச்சங்கமத்தில் 8ஆம் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நேசனல் புக் டிரஸ்ட் இந்தியா இணை இயக்குனர் பரிதா நாயக் அவர்கள் புத்தககண்காட் சியை பார்வையிட்டார். அரங் குகள் அனைத்தையும் பார் வையிட்ட பிறகு அவர் செய் தியாளர்களிடம் கூறியதாவது.
சென்னையில் ராயப் பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திட லில் ஏற்பாடு செய்யப்பட் டிருக்கும் சென்னை புத்தகச் சங்கமம் கோடைவிடுமுறை யில் சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்ட மக்களின் அறிவுத்தேடலுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ் கிறது. கடந்த ஆண்டு சென்னை புத்தகச்சங்கமத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து இந்த ஆண்டு பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம் மற்றும் நாங்கள் இணைந்து பெரிய அளவில் நடத்த ஏற்பாடு திட்டமிட்டு இந்த சென்னை புத்தகச்சங்மம் 2014 தற் போது நடந்து வருகிறது.
இரண்டாம் ஆண்டு சங்கமத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு தேவையான அனைத்து ஏற் பாடுகளும் மிகவும் சிறப் பாக செய்யப்பட்டுள்ளது. பல்வேறு அரங்குகளிலும் புதிய பல நூல்கள் பார் வைக்கு வைக்கப்பட்டுள் ளது. பொதுமக்கள் பலர் ஆர் வமுடன் வந்து வாங்கிச் செல்கின்றனர்.  சென்னை புத்தகச்சங்க மத்தில் பொதுமக்களுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய திடல் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவை புத்தகச் சங்கமத்திற்கு மக் களை அதிகமாக ஈர்க்க முக் கிய காரணமாக திகழ் கிறது.
இம்முறை குழந்தைக ளுக்கான கல்வி மற்றும் அறிவுசார் விளையாட்டுகள் வைக்கப்பட்டுள்ள அரங் குகளில் பெற்றோர்களின்  கூட்டம் அதிகம் இருப்பதை காணமுடிகிறது. இது குழந் தைகளுக்கு வாசிக்கும் ஆர் வத்தை ஊட்ட பெற்றோர் களின் முயற்சியாகவே கருது கிறேன்.  இதுவே இது போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் வாசிக் கும் ஆர்வம் அனைத்து தலை முறைகளுக்கும் சென்றடை கிறது.  வரும் காலங்களில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் புத் தகச் சங்கமம் இந்தியா முழு வதும் பேசப்படும் என்று கூறினார்.
viduthalai.in

கருத்துகள் இல்லை: