புதுடில்லி: காங்கிரஸ் பொதுச் செயலர் திக்விஜய் சிங்,
'டிவி' சேனல்
நிகழ்ச்சி தொகுப்பாளரான, அம்ரிதா ராயுடன், தனக்கு உறவு உள்ளதாக, வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்.காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவர், திக்விஜய் சிங், 67. மத்திய பிரதேச மாநில முதல்வராகவும், பதவி வகித்த அனுபவம் உள்ளவர். இவரின் மனைவி ஆஷா, 58, புற்றுநோய் பாதிப்பு காரணமாக, கடந்தாண்டு காலமானார்.சமீப காலமாகவே, பிரபல 'டிவி'யின் நிகழ்ச்சி தொகுப்பாளரான, அம்ரிதா ராயுக்கும், திக்விஜய் சிங்கிற்கும் உறவு உள்ளதாக, இணையதளங்களில் செய்திகள் வெளியாகின. இத்தனை நாட்களாக, இதுகுறித்து மவுனம் காத்து வந்த திக்விஜய் சிங், நேற்று இதை, பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். தனிப்பட்ட விஷயத்தில், மற்றவர்கள் மூக்கை நுழைக்க கூடாது.67 வயதானால் காதல் போய்விடுமா? அரசியல் தலைவர் காதலித்தால் தவறா? திக்விஜய் சிங் மிகவும் மென்மையான போக்கும் வளர்ச்சியை நோக்கிய குணமும் கொண்டவர். அவரின் மீது பழிகளை அள்ளி தூவ கூடாது.
சமூக வலைதளமான, 'டுவிட்டர்'ல், அவர் கூறியுள்ளதாவது:
அம்ரிதாவுடன், எனக்குள்ள உறவை ஒப்புக்கொள்வதில், எந்த தயக்கமும் இல்லை. அம்ரிதாவும், அவரின் கணவரும், ஒருமித்த கருத்துடன், விவாகரத்து கோரி, கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கு முடிவடைந்ததும், எங்கள் பிரச்னைக்கு தீர்வு காண்போம். அதேநேரத்தில், என் தனிப்பட்ட விஷயத்தில், மற்றவர்கள் மூக்கை நுழைப்பதை, நான் விரும்பவில்லை. இவ்வாறு, அவர், அதில் தெரிவித்துள்ளார்.
அம்ரிதாவும், 'டுவிட்டர்' சமூக வலை தளத்தில், 'என் கணவரும், நானும், பிரிந்து வாழ்கிறோம். இருவரும், விவாகரத்துக்காக கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். விவாகரத்து கிடைத்ததும், திக்விஜய் சிங்கை திருமணம் செய்வது குறித்து, முடிவு செய்வேன்' என, தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம், காங்கிரஸ் வட்டாரத்தில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.dinamalar.com

'விவாகரத்தானதும்...':

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக